Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 016 (How then can we argue?)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
14. அப்படியானால் நாம் எப்படி வாதிடுவது?அவநம்பிக்கையாளர்களிடம் பேசும்போது நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய சில காரியங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:
இவற்றை எல்லாம் மனதில் வைத்தவர்களாக, முதலாவதாக, அவநம்பிக்கையாளர்களுடைய கேள்விகளுக்கு நாம் மறைமுகமாக பதிலுரைக்க வேண்டும். அவர்களுடைய முனஊகங்களை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்து அவர்களுடைய வாதங்களைத் தகர்க்க வேண்டும். அதாவது, அவர்களுடைய முன்ஊகங்களை எடுத்துக்கொண்டு, அவை உண்மையாக இருந்தால், அவர்கள் எதற்கும் பொருள் கூற முடியாது, குறிப்பாக இப்போது அவர்கள் முன்வைக்கிற வாதத்தையே அவர்களால் செய்ய முடியாது என்பதைக் காண்பிக்க வேண்டும். அல்லது வேறு வகையாகச் சொன்னால்: அவர்களுடைய முன்ஊகங்கள் உண்மையாக இருந்தால் அவர்கள் கிறிஸ்தவம் உண்மையானதா இல்லையா என்பது உட்பட எதைப் பற்றியும் சரியாக அறிந்துகொள்ள முடியாது என்பதை அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும்! இரண்டாவதாக, நாம் அவநம்பிக்கையாளர்களுடைய கேள்விகளுக்குக் கிறிஸ்தவ முன்ஊகங்களின்படி பதிலுரைத்து, எப்படி வேதாகமம் நம்முடைய நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் சரியாக விளக்குகிறது என்பதைக் காண்பிக்க வேண்டும். கிறிஸ்தவ முன்ஊகத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே எதைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது வெளிப்படையாகக் காண்பிக்கப்பட வேண்டும். இதை நாம் எப்படிச் செய்வது என்று நீங்கள் கேட்கலாம். அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்தில் பவுல் இதை எப்படிச் செய்கிறார் என்பதைப் பாருங்கள். |