Previous Chapter -- Next Chapter
11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
20. அறிவுசார் பாவங்கள்
ஆ) முன்னுக்குப் பின் முரணான சிந்தனை அல்லது பேச்சு
முன்னுக்குப் பின் முரணான சிந்தனை அல்லது பேச்சு
இது பல்வேறு வடிவங்களில் காணப்படலாம். அவநம்பிக்கையார்களிடம் பொதுவாகக் காணப்படும் ஒன்று இரட்டை அளவுகோல். சிறப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய நாடுகளில் செய்த காரியங்களைப் பற்றி (சிலுவைப் போர்கள், காலனியாதிக்கம் அல்லது மேற்கத்தைய மறுகாலனியம்) கண்டித்துப் பேசுவார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் மத்திய கிழக்கில் அல்லது ஐரோப்பாவில் (ஸ்பெயின்) செய்த காரியங்களைப் பற்றி பேசவோ ஏன் அறிந்திருக்கவோ மாட்டார்கள்.
தாறுமாறான வாதத்தைப் போலவே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதிலும் பல்வேறு துணைப் பிரிவுகள் உண்டு.
(i) தர்க்கநியாயப் பிழைகள்: இவை உங்கள் வாதத்தில் உள்ள தர்க்கநியாயத்தை குறைக்கும் பிழைகள் ஆகும். அவை நியாயமற்ற வாதங்களாக இருக்கலாம் அல்லது பொருத்தமற்ற கருத்துக்களாக இருக்கலாம். உதாரணமாக கீழ்க்காணும் கூற்றை எடுத்துக்கொள்ளுங்கள்: உண்மையான விஞ்ஞானி யாரும் படைப்பை நம்பமாட்டார்கள். இந்த பிழை “கிணற்றில் விஷமிடுதல்” என்று அழைக்கப்படுகிறது (சில வேளைகளில் இது “உண்மையான ஸ்காட்லாந்துகாரன் இல்லை” என்றும் அழைக்கப்படுகிறது). இதன் நோக்கம் நாம் வாதத்திற்கு கொண்டுவரவிருக்கும் எந்த ஆதாரத்தையும் முன்பாகவே கேவலமாகப் பேசி அதை மதிப்பிழக்கச் செய்வது. இந்த உதாரணத்தில், நீங்கள் படைப்பை நம்பும் விஞ்ஞானிகளைக் கொண்டுவரும் போதெல்லாம் அவர் உண்மையான விஞ்ஞானி அல்ல என்று சொல்லிவிடுவார்கள். இப்படிப்பட்ட பல பிழைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையில் ஈடுபடுகிறவர்கள் அவை எந்தெந்த வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். என்னுடைய பிள்ளைகள் பயன்படுத்தும் புத்தகம், இந்த காரியத்தை நன்கு அறிமுகம் செய்வது “The Fallacy Detective ”. இன்னும் விவரமான நூல் என்றால் போ பென்னட் எழுதிய “Logically Fallacious” (by Bo Bennett).
(ii) பொருளற்ற வாதம்: முட்டாள்தனமான, பொருளற்ற அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும் கூற்று. இப்படிப்பட்ட கூற்றுகள் முன்வைக்கப்படும்போது அவற்றின் தர்க்கநியாய முடிவுகளுக்கு அவற்றை வழிநடத்தி (reductio ad absurdum) அவற்றின் பொருளற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும். அவ்வாறே இந்த கூற்றுக்கு எதிர்மறையான கூற்று உண்மையில்லை என்றால் என்ன நடக்கும் என்பதைக் காண்பிப்பதன் மூலமாகவும் அக்கூற்றின் பொருளற்ற தன்மையை அல்லது சாத்தியமற்ற தன்மையை நிறுவலாம். ஒழுக்கம் என்பது மனிதர்களுடைய விருப்பத் தேர்வுக்குரியது போன்ற காரியங்களைப் பேசுகிறவர்களோடு நாம் பேசும்போது இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். ஒழுக்கம் தனிப்பட்ட மக்களுடைய தேர்வுக்குரியது என்றால் இன அழிப்புகள், கூட்டுப் பாலியல் வல்லுறவு அல்லது மனிதர்களைக் கொன்று உண்ணுதல் போன்றவை தனிமனிதர்கள் விரும்பினால் தெரிவுசெய்யலாமா என்று கேட்பதன் மூலம் அவர்களுடைய வாதத்தின் பொருளற்ற தன்மையைக் காண்பிக்க முடியும்.
(iii) நடத்தை முரண்பாடுகள்: இது போலித் தனத்தின் ஒரு எளிய அடையாளமாக காணப்படலாம். ஆனால், இது அதையும் தாண்டிய தவறாகும். உதாரணமாக, சார்பியல் வாதத்தை நம்பும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போரைக் கண்டு கொதித்தெழுவார்.
(iv) முன்ஊக அழுத்தங்கள்: இது ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகாத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முன்ஊகங்களை நம்புகிறவர்களின் தவறு இது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் வாத முறையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு தங்கள் மார்க்கத்தை உணர்த்தலாம் என்றும் அதே வேளையில், பிறர் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது அவர்களை அதற்கு கீழ்ப்படுத்த வேண்டும் அல்லது கொலை செய்ய வேண்டும் ஆகிய இரண்டு முன்ஊகங்களையும் கொண்டிருத்தல். கீழ்காணும் குர்ஆன் பகுதியோடு பகுத்தறிவு வாதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையை எப்படி ஒத்துப்போகச் செய்ய முடியும்?: "கடவுளை நம்பாதவர்கள், கடைசி நாளை நம்பாதவர்கள், கடவுளும் அவருடைய தூதரும் தடைசெய்தவற்றை தடை செய்யாதவர்கள், திருமறையைப் பெற்றுக்கொண்டவர்களில் உண்மையில் சமயத்தின்படி வாழாதவர்கள் ஆகியோர் விரும்பியோ, விரும்பாமலோ நியாயமான வரியைச் (ஜிஸ்யா) செலுத்தும்வரை அவர்களுடன் சண்டையிடுங்கள்” (குர்ஆன் 9:29). முஸ்லிம்களுடைய சட்டப்படி நாம் செயல்பட்டால் அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? நாங்கள் “இயேசுவை நம்பாதவர்கள், கடைசி நாளை நம்பாதவர்கள், இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் தடைசெய்தவற்றை தடை செய்யாதவர்கள், குர்ஆனைப் பெற்றுக்கொண்டவர்களில் உண்மையில் சமயத்தின்படி வாழாதவர்கள் ஆகியோர் விரும்பியோ, விரும்பாமலோ நியாயமான வரியைச் செலுத்தும்வரை அவர்களுடன் சண்டையிடலாமா”? இந்தப் புரிதல் முரண்பாட்டை நாம் அடிக்கோடிட்டுக் காண்பிக்க வேண்டும். நாம் ஏன் அவநம்பிக்கையாளர்களின் முன்ஊகங்களைக் கவனத்துடன் கவனிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.