Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 013 (The importance of presuppositions)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 2 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் அடிப்படை அணுகுமுறை

11. முன்ஊகங்களின் முக்கியத்துவம்


ஒரு வாதத்தில் அல்லது நம்பிக்கையில் அல்லது கூற்றில் அடங்கியுள்ள அடிப்படை அனுமானங்களைத்தாள் நாம் முன்ஊகங்கள் என்று குறிப்பிடுகிறோம் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். இந்த அனுமானங்கள் யாராலும் மனம்போன போக்கில் ஏற்படுத்தப்படுவதில்லை, அவை அவர்களுடைய உலக நோக்கின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. அவர்களுடைய நம்பிக்கையின் கட்டமைப்புக்குள் அடிப்படை தளத்தில் இவை வருகின்றன. அனைத்தையும் விளக்குகிற அல்லது மதிப்பிடுகிற எல்லாவற்றையும் குறித்த அடிப்படையான பார்வை (அல்லது ஆரம்ப கட்ட நோக்கு) முன்ஊகங்கள் என அழைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட முன்ஊகங்கள் ஒருவருடைய சிந்தனையில் மிகப்பெரும் அதிகாரமாகத் திகழ்கின்றன. அந்த முன்ஊகங்களை மாற்றிக்கொள்ள ஒருவர் ஆயத்தமாக இருக்க மாட்டார். அவை மாற்றப்பட முடியாதவை என்றே கருதப்படும்.

நாம் அவநம்பிக்கையாளர்களோடு பேசும்போது, விஞ்ஞானத்தைப் பற்றியோ, தொல்லியலைப் பற்றியோ, எதைப் பற்றிப் பேசினாலும் அது இறுதியில் இறுதியான அதிகாரத்தைப் பற்றிய பேச்சிலேயே வந்து முடிவடையும். அதாவது உங்களுடைய முழுமையான நம்பிக்கை வடிவத்திற்கும் எது அதாரம் அல்லது அதிகாரம் என்பதே கேள்வி. ஒரு வாத ஓட்டம் எட்ட நினைக்கும் முடிவு எப்போதுமே ஒரு முன்ஊக தரமாகத்தான் இருக்கும். அதுதான் அந்த முடிவை நோக்கிய வாதத்தின் தன்மையை ஆளுகை செய்வதாக அமையும். அல்லது எட்ட நினைக்கும் முடிவு ஒருபோதும் இறுதி அதிகாரமாக இருக்காது (Greg Bahnsen, Van Til’s Presuppositionalism,in Penpoint Vol. VI:1.)

முன்ஊகங்கள் என்பன வெறும் அடிப்படை அனுமானங்கள் அல்ல. அதைப் பற்றி இவ்வாறு சிந்தித்துப் பாருங்கள். 2001 செப்டெம்பரில் மான்ஹட்டன் நகரில் இருந்த சோடிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அந்த கட்டடங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தார்கள். மான்ஹாட்டன் நகரின் மக்கள் தொகை 6 மில்லியன்; நாட்டு மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அப்போது நடைபெற்றதை நேரடி ஒளி,ஒலி பரப்பின. அந்த நிகழ்வுதான் மனித வரலாற்றிலேயே அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். நாம் அனைவரும் அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தோம், சுமார் இருபது வருடங்களாக அதைப் பற்றி பத்துக் கணக்கான ஆவணப்படங்கள், நூற்றுக் கணக்கான புத்தகங்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் இன்றுவரை மக்கள் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதைக் குறித்து மாற்றுக் கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு பார்வையையும் நியாயப்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. இவ்வளவு மக்களால் இத்தனை முறை பார்த்து அறியப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் தீர்க்கப்படாத சிக்கல்கள் இன்னும் இருப்பதேன்? ஏனெனில் நம்மிடத்திற்கு வரும் ஒவ்வொரு தகவலையும் நம்முடைய முன்ஊகங்களின் அடிப்படையில்தான் நாம் விளக்கப்படுத்திக் கொள்கிறோம்.

இதைவிட ஒரு எளிய உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் தாகமாக இருக்கும்போது ஏன் தண்ணீர் பருகுகிறீர்கள்? ஏனெனில் தண்ணீர் தாகத்தைத் தணிக்கிறது என்பது உங்கள் பதிலாக இருக்கும். ஆனால், இது உண்மை என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? ஏனெனில் இதுவரை எனக்கு எப்போதெல்லாம் தாகம் எடுத்ததோ அப்போதெல்லாம் நான் தண்ணீர் பருகியிருக்கிறேன். அது என்னுடைய தாகத்தைத் தணித்திருக்கிறது. இது எப்போது உண்மையாக இருக்கும் என்றால், நீங்கள் இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் முறையான தொடர்பிருக்கும் உலகத்தில் வாழ்ந்தால் மட்டுமே. இறந்த காலத்தில் சில நிலைகளில் நடைபெறும் காரியங்கள் எதிர்காலத்தில் அந்த நிலைகள் மாறாதபோது மீண்டும் நடைபெறுமானால் என்ன நடக்கும்? அதாவது, நாம் இப்போது ஒரு விதிமுறைகளின்படி இயங்கும் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எதுவும் நடைபெற வாய்ப்பிருக்கும் ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்தால், நீங்கள் இறந்த காலத்தில் தண்ணீர் பருகிய போது அது உங்களுக்கு என்ன செய்திருந்தாலும், அதை அடிப்படையாக வைத்து தண்ணீர் குடிக்கும்போது இப்போதோ எதிர்காலத்திலோ அது இதைத்தான் செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைத்தான் நாம் தத்துவத்தில் தூண்டுதல் பிரச்சனை (ல்ழ்ர்க்ஷப்ங்ம் ர்ச் ண்ய்க்ன்ஸ்ரீற்ண்ர்ய்) என்று அழைக்கிறோம். தண்ணீர் குடிப்பவர்களில் இருந்து நிலவில் காலடி பதிப்பவர்கள் வரை இந்த முனஊகத்தில்தான் தங்கள் ஒவ்வொரு செயல்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த தூண்டுதலுக்கான அடிப்படையை கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட உண்மையின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் (ஆதி. 1:1-3, கொலோ. 1:15). அவர் அந்த படைப்பைப் பராமரிக்கிறார் (கொலோ. 1:17, எபி. 1:3).நாம் இந்த படைப்பைப் பராமரிக்க வேண்டும் என்றும் (லேவி. 18:26-28), அதை ஆண்டுகொள்ள வேண்டும் என்றும் (ஆதி. 1:28), அதை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் பருவ காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும் என்று வாக்குறுதியளித்திருக்கிறார் (ஆதி. 8:21-22). ஆகவே, கிறிஸ்தவர்களாக நாம் இறந்த கால நிகழ்வுகளுக்கும் எதிர் கால நிகழ்வுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பையும் விதிகளின் தொடர்ச்சியான செயல்பாட்டையும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது, ஆனால் அவநம்பிக்கையாளர்கள் எப்படி அதைப் புரிந்துகொள்கிறார்கள்?

நாத்திகரான பெர்ட்ரன்ட் ரசல் என்ற தத்துவஞானி இவ்வாறு எழுதுகிறார்: “அனுதின வாழ்வில் உள்ள நம்பிக்கைகளைப் போலவே, விஞ்ஞான விதிகளின் ஆட்சி மற்றும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு போன்ற பொதுவான விஞ்ஞான விதிகள் முழுவதும் தூண்டுதல் விதியையே சார்ந்துள்ளன. மனித இனம் இப்படிப்பட்ட விதிகள் உண்மையானவை என்று எண்ணற்ற தருணங்களில் காண்டிருப்பதும் ஒரு முறைகூட அவை பொய்யானவை என்று காணாமலிருப்பதும் இந்த பொதுவான விதிகளில் நம்பிக்கை வைக்கப்படுவதற்கு காரணம் ஆகும். ஆயினும் தூண்டுதல் தத்துவத்தை முற்கோளாக எடுக்காவிட்டால் இந்த விதிகள் எதிர்காலத்தில் இப்படித்தான் செயல்படும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” (Bertrand Russell, The problem of philosophy. On Induction). அவநம்பிக்கையாளர் ஒருவர் அண்டத்தில் அனைத்தும் எந்த விதிகளுக்கும் உட்படாமல் தற்செயலாகவே நடைபெறுகின்றன என்ற தத்துவத்தை அனுமானிக்கலாம், ஆனால் அவர் அதை அனுபவத்தின் மூலம் நிறுவ முடியாது. ஏனெனில் ரசல் இவ்வாறு சொல்கிறார்: “தூண்டுதல் தத்துவமும் அவ்வாறே அனுபவத்தின் மூலமாக நிரூபிக்கப்பட முடியாததாக இருக்கிறது. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட காரியங்களில் தூண்டுதல் தத்துவம் சரி என்பதை நிரூபிக்க வாய்ப்பிருக்கிறது; ஆனால் இதுவரை ஆய்வு செய்யப்படாத காரியங்களைப் பொறுத்தவரை, இதுவரை ஆய்வு செய்யப்படாதவைகளில் இருந்து, இதுவரை ஆய்வு செய்யப்பட்டவைகள் வரை உள்ள காரியங்களில் தூண்டுதல் தத்துவம் மட்டுமே எதையும் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கிறது” (Ibid.).

இதிலிருக்கும் நகைமுரணைக் கவனியுங்கள. அவநம்பிக்கையாளர்கள் “தூண்டுதல்” என்பதை ஏற்றுக்கொள்வதும் இல்லை விளக்குவதும் இல்லை. ஆனால் அதை அனுமானித்துக்கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் வாதிடுவதில்லை அனுமானிக்கிறார்கள். அது உண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மையாக இருக்க முடியாது என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அது ஒரு முன்ஊகம். இவ்வுலகத்தின் இயக்கத்தைப் பற்றிய அடிப்படை அனுமானம். இதை வைத்துத்தான் உலகத்தின் இயக்கம் முழுமையையும் விளக்குகிறோம். அதுவே நம்முடைய இறுதி அதிகாரமாக இருக்கிறது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 03:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)