Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 003 (Nomadic pagans)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஒன்று: இஸ்லாத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 1: இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த பிராந்தியம்

1.1. நாடோடி புறஜாதியினர்


இஸ்லாத்திற்கு முன்பிருந்த அரேபியாவில், பெரும்பாலானோர் மேய்ச்சல் சார்ந்த நாடோடி குழுக்களாக வாழ்ந்தனர். இவர்கள் பழங்குடி அமைப்புகளில் வாழ்ந்தனர், அவை சிறிய குலங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் பல தெய்வ வழிபாட்டை கடைப்பிடித்து பல தெய்வங்களை வணங்கி வந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்த ஒரே மதத்தை பின்பற்றவில்லை, மாறாக ஒவ்வொரு குடும்பத்தினரும், குலத்தினரும், பழங்குடியினரும் தங்களது சொந்த தெய்வங்களை வணங்கினார்கள். சில தெய்வங்கள் பிற பழங்குடிகளுடன் பொதுவானவை, ஆனால் சில தெய்வங்கள் சிலருக்கே தனித்துவமானவை. இஸ்லாமிய ஆதாரங்கள் மூலமாகவே நாம் புறமத அரேபியாவைப் பற்றி அனைத்தையும் அறிந்திருக்கிறோம். உண்மையில், இந்தக் காலத்தைச் சேர்ந்த எந்த வரலாற்றுக் குறிப்புகளும் நம்மிடம் இல்லை. நாம் சார்ந்திருக்கும் சில ஆதாரங்கள் (Book of Idols by Hisham Ibn al-Kalbi from Iraq and Character of the Arabian Peninsula by Abu Muhammad al-Hasan al-Hamdani) நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டவை. இதன் விளைவாக, நமது புரிதல் குறைவாகவும் சில சமயங்களில் முரண்பாடானதாகவும் இருக்கிறது. உதாரணமாக, பிற காலத்திய மதங்களின் கடவுள்களின் இருப்பை விளக்கும் கதை வடிவிலான பதிவு செய்யப்பட்ட தொன்மவியல் கதைகள் நமக்கு இல்லாததால், இஸ்லாத்திற்கு முந்தைய தெய்வங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை. ஒவ்வொரு பிரதேசமும் தனித்தன்மைவாய்ந்த தெய்வங்களை வணங்கியது போல் தெரிகிறது, மேலும் இந்த தெய்வங்களின் பல பெயர்கள் அல்லது பட்டங்கள் நமக்குத் தெரிந்திருக்கின்றன. அத்தகைய தெய்வங்களில் ஒன்று அல்லாஹ் (Alla) என்று அழைக்கப்பட்டது. இது சிலரால் முதன்மை தெய்வமாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால், இஸ்லாமிய அல்லாவைப் போல் இல்லாமல் இவருக்கு வழிபடும் மக்கள் இருந்தனர். முழுமுதற் கடவுள் என்ற கருத்து கிறிஸ்தவ மற்றும் யூத சமூகங்களில் இருக்கிறது. இதிலிருந்து இஸ்லாமிய அல்லா என்ற கோட்பாடு தோன்றியிருக்கலாம். மற்றொரு கருத்து இருப்பினும், அல்லா என்ற சொல் வெறும் ஒரு பட்டம் அல்லது விளக்கமாக இருக்கலாம், அது பல தெய்வங்களில் ஒன்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. சில சிலைகள் வழிபாட்டுத் தொடர்பான மத்தியஸ்தர்களாகக் கருதப்பட்டன. பக்தர்கள் உயர்ந்த கடவுளை நேரடியாக அணுக தகுதியற்றவர்கள் என்று நம்பியிருந்ததால் இவ்வாறு வணங்கப்பட்டது. சில சிலைகளுக்குள் உயர்ந்த கடவுளால் உட்புகுத்தப்பட்ட ஆவி இருப்பதாகக் கருதப்பட்டது. எனவே அவற்றை சரியான முறையில் வணங்கியவர்களின் வேண்டுதல்கள் அந்த ஆவியால் நிறைவேற்றப்படுவதாக நம்பப்பட்டது.

இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் பயணங்களின்போது வழிபாடு செய்தனர். நகரங்களில் வாழ்ந்தோர் மிகவும் சிக்கலான மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட கோயில்களில் வழிபாடு செய்தனர். பல தெய்வ வழிபாட்டுத் தலங்கள் கூம்பு வடிவ கட்டடங்களைக் கொண்டிருந்தன. இவை "காபா" என அழைக்கப்பட்டன. இந்தத் தலங்கள் மக்கள் புனித யாத்திரை சென்றுவருகிற முக்கிய இடங்களாக இருந்தன. அங்கு பலி மற்றும் வலஞ்சுற்றிவருதல் (கல் தெய்வங்களைச் சுற்றி நடப்பது) ஆகியவை நடந்தன. அந்த சமயத்தில், அரேபிய தீபகற்பகத்தில் பல காபாக்கள் இருந்தன – குறைந்தது பல டஜன்கள் இருந்தன. அரேபிய மக்கள் இந்த காபாக்களுக்கு சிறப்பு நாட்களிலும் பிற நாட்களிலும் யாத்திரை செல்வது வழக்கமாக இருந்தது. அவர்கள் பலி செலுத்தி, சிலைகளுக்கு காணிக்கைகள் மற்றும் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவார்கள். அவை புனித ஸ்தலங்களாக கருதப்பட்டன (அவைகளின் சுற்றுபுறங்களில் போர் நடைபெற அனுமதிக்கப்படவில்லை), மேலும் வழிபடுபவர்கள் அவைகளைப் பராமரிப்பாளர்களுக்கு பொருளுதவிசெய்ய வேண்டும். இந்தக் காபாக்களில் ஒரு கருப்பு கல் இருந்தது; இந்தக் கற்கள் எரிமலைக் கற்கள் அல்லது விண்கற்களாக இருந்திருக்கலாம்; (இதைக் குறித்து அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு காணப்படுகிறது.) விண்கல் கோட்பாடு மிகவும் நம்பகத்தகுந்தது. ஏனென்றால், வானத்திலிருந்து விழும் ஒரு பொருள் ஒளியால் சூழப்பட்டிருப்பதைக் காணும்போது, அதை ஒரு வணக்கத்துக்குரிய பொருளாகக் கருதப்பட வாய்ப்பு அதிகம். ஏனெனில், முன்னர் குறிப்பிட்டபடி, உயர்ந்த படைப்பாளரான "அல்லா" வானத்தில் இருப்பதாக நம்பப்பட்டது. கடந்த ஆயிரம் வருடங்களில் அரேபியாவில் எரிமலை வெடிப்பு எதுவும் நடக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம், ஆகவே முந்தைய வெடிப்புகள் பற்றிய எந்தக் கதைகளும் நம்பகத்தகுந்தவை அல்ல, இது செவிவழிச் செய்தியாக பல காலமாக பரவியிருக்கலாம், மேலும், உலகின் பிற பகுதிகளில் எரிமலை வழிபாட்டுடன் வன்முறை சடங்குகள் இருந்தன, அவற்றைப் போன்ற எதையும் அரேபியாவில் காணவில்லை.

www.Grace-and-Truth.net

Page last modified on April 09, 2026, at 02:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)