Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 011 (The Meccan Years)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஒன்று: இஸ்லாத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 2: முகம்மதின் வாழ்க்கை
2.3. மெக்காவின் வருடங்கள்இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில், முக்கிய கருத்து அல்லாவை அஞ்சி நன்மைசெய்ய வேண்டும் என்பதே ஆகும். இந்தக் காலகட்டத்தில், தனித்துவமான இஸ்லாமிய உபதேசங்கள் சில இருந்தன அல்லது இருக்கவில்லை. உண்மையில், முகம்மது நபியின் நம்பிக்கைகள், அப்போதைய யூத-கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை மிகவும் ஒத்திருந்தன. முஸ்லீம் அல்லாதவர்கள் மீது நேர்மறையான பார்வை இல்லாவிட்டாலும், அவர்களுக்கு எதிராக பகைமை உணர்வு இருக்கவில்லை. அவர் முஸ்லீம்களிடையே சமத்துவத்தை குறைந்தபட்சம் ஆண்களிடையேயாவது கடைப்பிடிக்குமாறு போதித்தார். இருப்பினும், இந்த போதனை மெக்கா சமூகத்தைக் கவரவில்லை. ஏனென்றால், முதலாவதாக, மெக்கா பழங்குடி மக்கள் பொதுவாக செல்வந்தர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர், மேலும் அடிமை, வணிகர்கள் போன்ற தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் தங்களை சமமாகக் கருத மறுத்தனர். இரண்டாவதாக, மெக்காவுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களை தங்கவைப்பதன் மூலம் அவர்கள் நல்ல வருமானம் ஈட்டினர். இருப்பினும், அவரது போதனைகள் ஏற்றுக்கொள்ளப்படாத போதிலும், தனது மாமனாரின் செல்வாக்கு காரணமாக முகம்மது நபி தனது குலத்தின் ஆதரவில் இருந்தார். இதன் காரணமாக, அவர் மெக்காவில் ஒப்பீட்டளவில் அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்தார், அங்கு தனது புதிய மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தார். இவர்கள் பெரும்பாலும் அடிமைகள் அல்லது ஏழ்மையான அரேபியர்களாக இருந்தனர், ஆனால் இதில் சிலர் செல்வந்தர்களாகவும் இருந்தனர். |