Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 043 (Christ fed the multitude)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 7: குர்ஆனில் கிறிஸ்துவின் அற்புதங்கள்
7.5. கிறிஸ்து திரளான ஜனங்களுக்கு உணவளித்தார்பரிச்சயமானதாகத் தெரிகிறதா? யோவான் 6-ஆம் அதிகாரத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த விவரத்தை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் குர்ஆன் இந்தக் கதையை அல்ல, வேறு ஒரு கதையைச் சொல்கிறது. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாவை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்." அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள். மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாவே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (அல்குர்ஆன் 5:112-114)
அப்போஸ்தலர் 10-ல் பேதுருவின் தரிசனம் என்ற மற்றொரு விவிலிய விவரங்களுடன் நீங்கள் ஒற்றுமையைக் காணலாம் என்று நான் நம்புகிறேன். முகமது தனது குழந்தைப் பருவத்தில் தன்னைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து கேட்ட இரண்டு கதைகளையும் குழப்பியிருக்க முடியும். இந்தக் கதை எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது இதன் பொருள் என்ன என்பது குர்ஆனிலேயே தெளிவாக இல்லை, எனவே முஸ்லீம்கள் இதைப் பற்றி என்ன நம்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நாம் விளக்கவுரைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. தேவனிடமிருந்து இயேசு பந்திக்கு போஜனம் கேட்பது பற்றிய பல கதைகளை அவர்கள் கூறுகிறார்கள்; அவற்றில் பெரும்பாலானவை அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், சாதாரண முஸ்லீம்களிடையே பிரபலமானவை. ஒரு விளக்கவுரையாளர் இயேசு எவ்வாறு இஸ்ரவேலர்களை முப்பது நாட்கள் உபவாசிக்கச் சொன்னார் என்று கூறுகிறார்; அவர்கள் அப்படிச் செய்தபின்பு, அவரிடத்தில் திரும்பிவந்து, தங்களுக்குப் பசிக்கிறது என்றார்கள்; பரலோகத்திலிருந்து தங்களுக்கு ஒரு விருந்தை அனுப்பும்படி அல்லாவிடம் கேட்கும்படி அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். ஆகவே இயேசு கந்தைத் துணிகளைத் தரித்துக்கொண்டு சாம்பலின்மேல் உட்கார்ந்து ஜெபம் செய்தார். தேவதூதர்கள் ஒரு மேஜையோடே வந்தார்கள், அதன்மேல் ஏழு அப்பங்களும் ஏழு மீன்களும் இருந்தன, அவர்கள் ஜனங்களுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள், அவர்கள் எல்லாரும் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள். (இப்னு கதீர், குர்ஆன் விளக்கவுரை 5:112-115). ஒருவர் தீர்க்கதரிசி என்பதற்கு சான்றாக அற்புதங்கள் இஸ்லாத்தில் ஒரு வரையறுக்கும் பண்பாக இருக்கிறது. ஆனால், முஹம்மது நபி அவர்கள் இதற்கு விதிவிலக்காகக் கருதப்படுகிறார். ஏனென்றால், முந்தைய தலைமுறைகள் முந்தைய தூதர்களின் அற்புதங்களை நம்ப மறுத்ததால், நான் எந்த அற்புதங்களையும் செய்ய மாட்டேன் என்று அல்லா குர்ஆனில் கூறுகிறான் (குர்ஆன் ஒரு அற்புதம் என்று கருதப்படுகிறது என்றாலும், மேலே குறிப்பிடப்பட்டபடி குறைவான நம்பகத்தன்மை வாய்ந்த ஹதீஸ்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் முஹம்மது நபி பிற அற்புதங்கள் செய்ததாக கூறுகின்றன). இஸ்லாமிய தூதர்கள் யாரும் இயேசு செய்த அற்புதங்களைப் போன்று எந்த வகையிலும் நெருங்கி வருவதில்லை. எனவே, இது அவரை மற்ற தூதர்களுக்கு மேலாக நிலை நிறுத்துகிறது. இருப்பினும், அவர் செய்ததாகக் கூறப்படும் சில அற்புதங்கள் அவரை சிறந்த ஒளியில் சித்தரிக்கவில்லை. உதாரணமாக, அப்பாவி குழந்தைகளை பன்றிகளாக மாற்றும் கதை, தீர்க்கதரிசிகள் பாவமற்றவர்கள் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது. |