Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 044 (CHAPTER EIGHT: CHRIST IN ISLAM AS A SERVANT AND MERE HUMAN)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்

அத்தியாயம் 8: இஸ்லாத்தில் கிறிஸ்து ஒரு ஊழியக்காரன் மற்றும் சாதாரண மனிதன்


குறிப்பாக குர்ஆனும், பொதுவாக இஸ்லாமும் கிறிஸ்துவை எந்த ஒரு நபருக்கும் மேலாக போற்றினாலும், இயேசு ஒரு சாதாரண மனிதர் என்று மீண்டும் மீண்டும் அவை சளைக்காமல் சுட்டிக்காட்டுகின்றன. குர்ஆன் கூறுகிறது:

"அல்லாவுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது." (அல்குர்ஆன் 19:35).

அதே அத்தியாயம் கூறுகிறது:

இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும். அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்- ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாவுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 19:88-93)

இவ்வாறு, இயேசு கடவுளின் குமாரன், அவர் முற்றிலும் மனிதரானவர் மற்றும் முற்றிலும் கடவுளானவர் என்ற உண்மை முஸ்லீம்களுக்கு வெறுக்கத்தக்கது என்பதை நாம் காணலாம். உண்மையில், கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் பிதாவினிடத்தில் அவருக்கு இருக்கும் புத்திரத்துவத்தைப் பற்றி விவாதிப்பதைக் கூட இஸ்லாம் தெய்வ நிந்தனையாகக் கருதுகிறது. ஆனால் நமது முஸ்லீம் நண்பர்களுடனும் தொடர்புகளுடனும் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வது கடினமாக இருப்பதற்கு இது மட்டுமே காரணம் அல்ல. ஒரு சிக்கலான காரணி என்னவென்றால், பொதுவாக, கிறிஸ்தவர்கள் உண்மையில் கிறிஸ்துவைப் பற்றி என்ன நம்புகிறார்கள் என்பதை முஸ்லீம்கள் உண்மையில் அறிவதில்லை, கிறிஸ்தவர்கள் என்ன நம்புகிறார்கள் என்று குர்ஆன் சொல்கிறதோ அதை மட்டுமே அவர்கள் அறிவார்கள். இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட விஷயங்கள்.

கிறிஸ்தவர்கள் சொல்வதை புரிந்துகொள்வது முஸ்லீம்கள் புரிந்துகொள்வதில்லை, புரிந்தகொள்ள முடியாது என்று கூட நான் சொல்கிறேன். குர்ஆன் அல்லாவின் வார்த்தை என்றும், அது முற்றிலும் சரியானது என்றும் அவர்கள் முன் அனுமானத்திலிருந்து தொடங்குகிறார்கள். எனவே, கடவுளுக்கு ஒரு மகன் இருக்க முடியாது, ஏனென்றால் அதற்கு ஒரு மனைவி தேவை என்று குர்ஆன் கூறும்போது, ஒரு மகனைப் பெறுவது சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறார்கள். அரபு மொழி பல உறவுகளைக் குறிக்க மகன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், இந்த சூழலில் முஸ்லீம்கள் கடவுளின் மகன் என்ற கருத்தை இந்த ஒரு வழியில் விளக்குவதற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்துவின் புத்திரத்துவம் என்ற கருத்தை குர்ஆன் தவறாகப் புரிந்துகொள்கிறது என்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இஸ்லாமியர் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வது குர்ஆனுடன் முரண்படும், அது தானாகவே குர்ஆனை தவறு என்று அழைப்பதாகிவிடும். ஒருவேளை, அல்லாவுக்கு ஒரு மகனும் மனைவியும் இருந்தனர் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதாக குர்ஆனில் அல்லா சொல்லியிருந்தால், அப்போதும் அது கிறிஸ்தவர்கள் சொல்வதாகத்தான் கருதப்படும். இந்த விசயத்தில், நமது நம்பிக்கைகள் உண்மையா இல்லையா என்பது முக்கியமல்ல. குர்ஆன் நமது நம்பிக்கையை தவறாக சித்தரிக்கிறது என்பதை வெறுமனே ஒப்புக்கொள்வது குர்ஆனையே விமர்சிப்பதாகும். ஆகவே, நாம் எதை நம்புகிறோம் என்பதை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வைப்பது ஒரு முக்கிய மைல்கல், உண்மையில் போரில் பாதி வெற்றியைப் பெற்றதைப் போன்றது.

கிறிஸ்து பிதாவின் மகன் என்று சொல்வது அவரை ஒரு இணை கடவுளாக ஆக்குகிறது என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், இது பலதெய்வ கொள்கையின் ஒரு வடிவம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். கிறிஸ்து ஒரு சாதாரண மனிதராக இருப்பாரேயானால், இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக முஸ்லீம்களுடன் உடன்படுவோம்; நிச்சயமாக, ஒரு சாதாரண உயிரினத்தை கடவுளுக்கு சமமாக வைத்திருப்பது பல தெய்வ வழிபாடு மற்றும் தெய்வ நிந்தனை. மேலும் ஒரு சாதாரண உயிரினம் கடவுளாக மாறுவது சாத்தியமில்லை என்றும் நாம் நம்புகிறோம். இது கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் இடையிலான உறவு என்று நாம் தெளிவாகவும் அடிப்படையாகவும் முஸ்லீம்களுடன் உடன்படவில்லை, ஏனென்றால் பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம், அல்லது எபிரேயருக்கு எழுத்தாளர் சொல்வது போல், "கிறிஸ்து அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார். " (எபிரெயர் 1:3).

எனவே நாம் முஸ்லீம்கள் என்ன நம்புகிறார்கள் என்று பார்த்தோம் (மற்றும் நம்ப வேண்டும்), நாம் இயேசு கடவுளின் மகன் என்று பேசும்போது, நாம் ஒரு தந்தை மற்றும் ஒரு தாய் தேவைப்படும் ஒரு உயிரியல் உறவு பற்றி பேசுகிறோம் என்று கருதி குர்ஆன் மறுக்கிறது:

"அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 6:101)

பாலியல் உறவில்லாமல் மகன்களே இல்லை என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், மேலும் அனைத்து குர்ஆன் உரையாசிரியர்களும் இந்த விஷயத்தில் தங்கள் ஆட்சேபனையை உருவாக்குகிறார்கள். உதாரணமாக, தபரி கூறுகிறார்: "அல்லாவுக்கு மனைவி இல்லாதபோது எப்படி ஒரு மகன் இருக்க முடியும், ஆண் மற்றும் பெண் மூலம் மட்டுமே மகன் வர முடியும்", இதேபோல் பைதாவி கூறுகிறார்: "அல்லா ஒரு மகனைப் பெற வேண்டுமானால் அவனுக்கு சமமான மனைவி இருக்க வேண்டும், அது அல்லாவுக்கு சாத்தியமற்றது".

கிறிஸ்தவர்கள் தந்தை, தாய் மற்றும் மகனை நம்புவதில்லை என்று கூறப்படும்போது முஸ்லீம்கள் எப்போதும் ஆச்சரியப்படுகிறார்கள், குர்ஆனின் படி கிறிஸ்தவ திரித்துவம் இதுதான்:

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாவையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" (அல்குர்ஆன் 5:116)

சில கிறிஸ்தவர்கள் குர்-ஆன் கொலிரிடியனிசத்தை ஆட்சேபிப்பதாக நினைக்கிறார்கள், இது இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் ஒரு ஆரம்பகால கிறிஸ்தவ கள்ள உபதேச இயக்கமாகும், அதைப் பின்பற்றுபவர்கள் மரியாளை ஒரு தெய்வமாக வணங்கினர். கி.பி. 376ல் சைப்ரசில் உள்ள சலாமிஸ் ஆயர் எபிபானியஸ் எழுதியதைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை, புறஜாதியார் பெருமளவில் இருந்த அப்போதைய அரேபியாவில் சில பெண்கள் மரியாளை வழிபடுவதில் ஒத்திசைந்தனர், மேலும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு சிறிய கேக்குகள் அல்லது ரொட்டி சுருள்களை வழங்கினர். இந்த கேக்குகள் கோலிரிஸ் (கிரேக்கம்: κολλυρις) என்று அழைக்கப்பட்டன, மேலும் இவை கோலிரிடியன்ஸ் என்ற பெயரின் மூலமாகும். ஆனால் அத்தகைய பெண்கள் குழு இருந்தது பல அறிஞர்களால் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் எபிபானியஸைத் தவிர அவர்களின் இருப்பைப் பற்றி வேறு எந்த குறிப்பும் நமக்கு கிடைக்கவில்லை. குர்ஆன் யாருடைய போதனையை பிரச்சினையாக எடுத்துக்கொள்கிறது என்பது பற்றி வேறு பல கோட்பாடுகள் உள்ளன: அது மார்சியோனியர்கள், நசோரியர்கள், மரியோலாட்ரிஸ்டுகள் அல்லது அக்கால யூதர்களாக இருக்கலாம். இருப்பினும், குர்-ஆனின் ஆட்சேபம் உண்மையான கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அல்ல, மாறாக கிறிஸ்தவமே கூட நிராகரிக்கும் போதனைகளுக்கு எதிரானது என்பது வெளிப்படையானது (மேலும் விவாதத்திற்கு, கிறிஸ்தவ முஸ்லீம் உரையாடலில் குர்-ஆன் என்ற தலைப்பில் காணப்படும் பக்கத்தைப் பார்க்கவும்). ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் பற்றி முகமது ஏன் இந்த கருத்தைக் கொண்டிருந்தார் என்பதைப் பொருட்படுத்த வேண்டாம் – கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மரியாளை கடவுளின் மனைவி என்று நம்பவில்லை அல்லது உரிமை கோரவில்லை என்றாலும் – ஒரு முஸ்லீமுக்கு அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் குர்ஆன் வேறுவிதமாகக் கூறியது.

கிறிஸ்து கடவுளாக இருக்க முடியாது என்று முஸ்லீம்கள் நம்புவதற்கு ஒரு இறுதி காரணம் என்னவென்றால், குர்ஆனின் படி

"மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!!" (அல்குர்ஆன் 5:75)

எனவே குர்-ஆனின் படி, இயேசு உணவு சாப்பிட்டதால், அவர் கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருந்தது என்று அர்த்தம், அல்லா அதை செய்ய முடியாது.

இயேசுவைப் பற்றிய குர்-ஆன் கருத்துக்களை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

A. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும்.'' (அல்குர்ஆன் 4:171)
B. அதற்கு அவன், "நிச்சயமாக நான் அல்லாவுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்." (அல்குர்ஆன் 19:30)
C. "அல்லாவிடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.” (அல்குர்ஆன் 3:59))

கிறிஸ்துவைப் பற்றிய இஸ்லாமிய சிந்தனையின் சாராம்சம் என்னவென்றால், யூதர்கள் தங்கள் மார்க்கத்தில் மாற்றிக் கொண்டதை சரி செய்வதற்காக அல்லா யூதர்களுக்கு இன்ஜீல் (நற்செய்தி) என்ற புத்தகத்துடன் தூதராக அனுப்பினான், அவர்கள் அவரைக் கொல்ல நினைத்தபோது அல்லா அவரை வானத்திற்கு எடுத்துக்கொண்டான். கடைசி நாட்களில் அவர் இறங்கி வந்து, முஸ்லீம் இமாமைப் பின்பற்றி, சிலுவையை உடைத்து, பன்றியைக் கொன்று, திருமணம் செய்துகொண்டு, இறந்து, முகமதுவின் அருகில் அடக்கம் செய்யப்படுவார். அவர் ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர் ஜெபித்தார், உபவாசம் இருந்தார், சாப்பிட்டார், குடித்தார், மேலும் அவர் ஒரு பெண்ணிடத்தில் பிறந்தார். எனவே அவர் ஒரு சிருஷ்டி, அந்த சிருஷ்டி ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது.

கிறிஸ்துவைப் பற்றிய முஸ்லீம் நம்பிக்கைகள் வேதாகம சத்தியத்திலிருந்து கணிசமாக வேறுபட்டவை. விவரங்களில் நாம் வேறுபடுகிறோம் என்றாலும் இரண்டு விஷயங்களில் நாம் வெகுவாக உடன்படுகிறோம்:

1. கிறிஸ்து தேவனுடைய தாசர். கிறிஸ்து தீர்க்கதரிசி, ஆசாரியர், ராஜா, கர்த்தருடைய தாசர் என்று வேதாகமம் கூறுகிறது (ஏசாயா 43:10; எபேசியர் 1:10). பிலிப்பியர் 2:6-7; (ஏசாயா 42:1). கிறிஸ்துவை கர்த்தரின் ஊழியராக விசுவாசிப்பது அவருடைய தெய்வீகத்தன்மையுடன் முரண்படுகிறது என்று கிறிஸ்தவர்கள் பார்ப்பதில்லை. நமது முஸ்லீம் தொடர்புகளிடம் நாம் கேட்கக்கூடிய ஒரு கேள்வி: கடவுள் ஒரு மனிதனாக மாற விரும்பினால், அவர் ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்களா? என்று விவாதத்திற்காக கேளுங்கள். பிதாவுக்கு கிறிஸ்து முழுமையாகக் கீழ்ப்படிவது அவர் ஒரு பரிபூரண மனிதன் என்பதற்கு அருமையான சான்றாகும். கிறிஸ்தவர்கள் நம்புவதில் பாதியை இஸ்லாம் உறுதிப்படுத்துகிறது மற்றும் இரண்டாம் பாதியை கடுமையாக மறுக்கிறது. குர்ஆன் முஸ்லீம்களுக்கு கிறிஸ்து, பைபிள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவற்ற படத்தை விட்டுச் சென்றுள்ளது. ஆகையால், ஒரு முஸ்லீமுக்கு வேதாகமத்தின் மூலம் கிறிஸ்துவைப் பற்றி மேலும் அறிய அல்லது குர்ஆன் சொல்லாததை அறிய மறுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

2. இயேசு ஒரு மனிதர், என்று பைபிள் மீண்டும் மீண்டும் கூறுகிறது. இருப்பினும், முஸ்லீம்கள் புரிந்துகொள்ளாதது என்னவென்றால், கிறிஸ்து முழு மனிதனாகவும் முழுமையாக கடவுளாகவும் இருக்கிறார் என்ற கருத்தாகும். "இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." (ரோமர் 1:4-5) என்று வேதாகமம் கூறும்போது, இது முஸ்லீம்களுக்கு புரியாது, ஏனென்றால் நாம் முன்பு குறிப்பிட்டபடி, அந்த புத்திரத்துவம் உயிரியல் ரீதியானதாக மட்டுமே இருக்க முடியும் என்று அவர்கள் முன்தீர்மானித்திருக்கிறார்கள்.

மற்றொரு காரணம், முஸ்லீம்கள் அரபு மொழியில் "அல்லா" என்ற வார்த்தையை சரியான பெயர்ச்சொல்லாக (அல்லது பெயர்) பயன்படுத்துகின்றனர், அதே நேரத்தில் பைபிள் "எலோஹிம்" என்பதை ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்துகிறது, இது கடவுளை மட்டுமல்ல, மக்களையும் குறிக்கலாம் (எ.கா. சங்கீதம் 82:1,6; யாத்திராகமம் 7:1; யாத்திராகமம் 21:6; யாத்திராகமம் 22:8-9). ஒரு சூழ்நிலையில் இறுதி அதிகாரத்தைக் குறிக்க பைபிள் இதைப் பயன்படுத்துகிறது, மேலும் இது "வல்லமைமிக்கவர்கள்" என்று துல்லியமாக மொழிபெயர்க்கப்படலாம். பைபிள் சரியான பெயர்ச்சொல் அல்லது பெயராகப் பயன்படுத்துகிறது, ஏனென்றால் கடவுள் "யாவே" என்பது உண்மையான கடவுளை மட்டுமே குறிக்கிறது, வேறு யாரையும் அல்ல, எலோஹிமை அல்ல. ஆனால் இயேசுவே கடவுள், பிதா கடவுள், ஆவியானவர் கடவுள் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதை முஸ்லீம்கள் கேட்கும்போது, நாம் திரித்துவத்தில் மூவருக்கும் ஒரே பெயர்ச்சொல் அல்லது பெயரைப் பயன்படுத்துகிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், இதனால் அவர்கள் இயேசுவே பிதா, பிதாவே ஆவியானவர் என்று சொல்வது போல் கேட்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள் திரித்துவத்தை மூன்று நிலைகளுடன் (திட, திரவ மற்றும் நீராவி) ஒப்பிடுவது போன்ற மனித ஒப்புமையைப் பயன்படுத்தி விளக்க முயற்சிக்கும்போது இது மிகவும் பயனற்றதாக காணப்படுகிறது, ஏனெனில் இது முஸ்லீம்கள் உணரும் முறைகளின் கருத்தை செயல்படுத்துகிறது. நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல் என்னவென்றால், நாம் நம்புவதை தெளிவாக விளக்குவது அல்லது சொல்வது, மேலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை இணங்கச்செய்ய விட்டுவிடுவதாகும்.

குர்ஆன் சொல்வதைத் தவிர வேறு ஒன்றை நாம் நம்புகிறோம் என்பதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது முதல் தடை என்பதை நினைவில் கொள்வது அவசியம். பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு கிறிஸ்தவ நம்பிக்கைகள் அல்லது வேதாகம போதனை பற்றி எதுவும் தெரியாது, ஏனென்றால் அவர்கள் அதை ஒருபோதும் படித்ததில்லை அல்லது அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை அல்லது இரண்டையுமே செய்வதில்லை. பைபிளைப் படித்ததாகக் கூறும் பல முஸ்லீம்கள் பொதுவாக சில பைபிள் வசனங்களுடன் ஒரு முஸ்லீம் வக்காலத்து வாங்குபவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைப் பெற்றதாக அர்த்தம், அல்லது முஸ்லீம் வக்காலத்து வாங்குபவர் மேற்கோள் காட்டிய அந்த வசனங்களைப் பார்க்க அவர்களிடம் ஒரு பைபிள் இருந்தது. தனிப்பட்ட முறையில் பைபிளுடனான எனது முதல் தொடர்பு இந்த வழியில் இருந்தது. கிறிஸ்தவத்தை விமர்சித்து ஒரு முஸ்லீம் எழுத்தாளர் பயன்படுத்திய ஒரு வசனத்தை பார்க்க எனக்கு ஒரு பைபிள் கிடைத்தது. முஸ்லீம்கள் தங்களிடம் இறுதி ஏற்பாடு இருப்பதாக நம்புகிறார்கள் (சில மேற்கத்திய மயமாக்கப்பட்ட முஸ்லீம்கள் குர்-ஆன் அவ்வாறு அழைக்க விரும்புகிறார்கள்) எனவே அவர்கள் பைபிளைப் படிக்க வேண்டிய அவசியமில்லை: ஏனென்றால் அது குர்ஆனுடன் ஒத்துப்போனால், அவர்களுக்கு அது தேவையில்லை; அது ஒத்துப்போகவில்லையென்றால், அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். எனவே வேதாகம போதனைகளைப் பற்றிய உண்மையான விவாதம் தொடங்குவதற்கு முன்பு உங்கள் முஸ்லீம் தொடர்புகளுடன் இது குறித்து அதிக நேரம் செலவிடுவது அவசியம் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 22, 2026, at 04:09 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)