Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 083 (The Claim of prophecies about Mohammed in the Bible)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு

13.5. பைபிளில் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனங்கள் இருப்பதாக கோருவது


இறுதியாக நாம் பார்க்க வேண்டிய ஐந்தாவது மற்றும் கடைசி கருத்து, முஸ்லீம்கள் விவிலியத்தின் சில பகுதிகளை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வதை விட முற்றிலும் வேறுபட்ட அர்த்தத்தில் எடுத்துக்கொள்வது பற்றியது. இந்த வசனங்கள் முகமது நபியை குறிக்கின்றன என்று கூறப்படுகிறது, ஏனென்றால் குர்ஆனில் உள்ள ஒரு வசனத்தில் இயேசு இஸ்ரவேலரை நோக்கி:

“மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.” (குர்ஆன் 61:6)

அஹமது என்ற பெயர் அரபு மொழியில் முகமது என்ற பெயருடன் ஒரே மூல எழுத்துக்களைக் கொண்டுள்ளது, எனவே அது முகமது நபியைக் குறிக்கிறது என்று கருதப்படுகிறது. இதன் விளைவாக, முஸ்லீம்கள் பொதுவாக பைபிளில் முகமது நபியைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவற்றை நீக்கிவிட்டதாக சிலர் நினைக்கிறார்கள், சிலர் உரையை அடையாளக்குறி முறையில் புரிந்துகொண்டால் அவை இன்னும் இருப்பதாக நினைக்கிறார்கள். இது பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன, அவை உண்மையில் முகமது நபியைக் குறிக்கும் பைபிள் வசனங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

சில கற்பனை செய்யப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அபத்தமானவை. உதாரணமாக, யோவான் 14:30-ல் இயேசுவின் கூற்றுக்களை எடுத்துக் கொள்ளுங்கள்:

“இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.”

சில முஸ்லீம் அறிஞர்கள் இதை முகமது நபியைப் பற்றிய தீர்க்கதரிசனமாகக் கருதுகின்றனர், "இந்த உலகின் ஆட்சியாளர்" என்பது முகமது நபியைக் குறிக்கும் தகுதியுடைய பட்டம் என்று கூறுகின்றனர். நிச்சயமாக, இந்த தலைப்பு பைபிளில் சாத்தானைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதை முஸ்லீம்கள் அறியாததால், இதன் முரண்பாட்டை அவர்கள் பார்க்கவில்லை!

பெரும்பாலான இந்தக் கற்பனை செய்யப்பட்ட தீர்க்கதரிசனங்கள் பைபிளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டவை அல்ல. அவை முஸ்லீம்களுக்காக அல்லது பைபிளைப் பற்றி எதுவும் தெரியாத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டுள்ளன. இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் பைபிள் வசனங்களை தவறாகப் புரிந்துகொள்ளும் அதே முறைகளைப் பயன்படுத்துகின்றன (அல்லது வேண்டுமென்றே), அல்லது வசனங்களை அல்லது சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் உண்மையான அர்த்தத்தை மறைத்து தங்களுக்கு விருப்பமான அர்த்தத்தை கொடுக்க முயற்சிக்கின்றன. இதற்கு ஒரு உதாரணம், உபாகமம் 18:18-ல் கடவுள் மோசேயிடம் கூறும்போது:

“உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.”

முஸ்லீம்கள் "அவர்களின் சகோதரர்கள்" என்பது அரேபியரைக் குறிக்கிறது என்று கூறுகின்றனர், ஏனெனில் அரேபியர்கள் - ஈசாக்கின் சகோதரரான இஸ்மாயேலின் சந்ததியினர் – அவர்கள் சகோதரர்கள் ஆவார்கள். எனவே அத்தகைய தீர்க்கதரிசி இஸ்ரவேலராக இருக்க முடியாது, ஆனால் அரேபியராகத்தான் இருக்க வேண்டும். இந்தப் பகுத்தறிவு முறையில் ஒரு சிக்கல் உள்ளது: இஸ்ரவேல் என்று அழைக்கப்படுவர்கள், ஈசாக்கிலிருந்து வந்தவர்கள் அல்ல, ஆனால் இஸ்ரவேல் (யாக்கோபு) என்ற நபரின் சந்ததியினர் என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். எனவே ஈசாக்கின் தகப்பனே இஸ்ரவேலின் ஸ்தாபகர், ஈசாக்கு ஸ்தாபகர் அல்ல, அவர்களின் நிறுவனராகிய தகப்பனின் ஒன்றுவிட்ட சகோதரரே இஸ்மாயேல், எனவே இஸ்ரவேலர்களின் நேரடி முன்னோர் அல்ல. "அவர்களின் சகோதரர்கள்" என்பது இஸ்ரவேலரை குறிக்கவில்லை என்றால், ஈசாக்கின் இரட்டை சகோதரர் ஏசாவின் வழித்தோன்றல்களான எதோமியர்களுடன் இணைவது மிகவும் பொருத்தமாக இருக்கும், ஏனென்றால் இது அரேபியர்களை விட மிக நெருக்கமான உறவு.

பைபிள் திருத்தப்பட்டதாக முஸ்லீம்கள் நம்பினால், அவர்கள் ஏன் அதிலுள்ள தீர்க்கதரிசனங்களை நம்புகிறார்கள் என்பதையும் நாம் முஸ்லீம்களிடம் கேட்க வேண்டும். ஏன் மாற்றம் செய்யப்பட்ட புத்தகத்தின் தீர்க்கதரிசனங்களை நம்ப வேண்டும்? அவர்கள் அவற்றை நம்பினால், ஏன் மற்றவற்றை நிராகரிக்க வேண்டும்? இந்த நேரத்தில், முஸ்லீம்கள் பொதுவாக பைபிள் முழுவதுமாக திருத்தப்படவில்லை, ஆனால் அதின் சிறு பகுதிதான் திருத்தப்பட்டது என்றும், இஸ்லாத்துடன் உடன்படாத பகுதிகளில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். மீண்டும், இது ஆதாரமற்ற முட்டாள்தனமான கருத்து. சில யூதர்கள் செய்ததைப் போலவே கிறிஸ்தவர்கள் செய்வது எளிதாக இருக்காதா? தீர்க்கதரிசனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நாங்கள் நினைக்கிறது போல அவை அர்த்தம் கொடுக்கவில்லை என்று சொல்லுவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, யூதர்கள் ஏசாயா 53-ம் அதிகாரத்தை தங்கள் பைபிளிலிருந்து நீக்கவில்லை; மாறாக, அதை விளக்கவோ அல்லது அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கவோ முயற்சி செய்கிறார்கள். மேலும், யூதர்களும் கிறிஸ்தவர்களும் முகமது பற்றிய தீர்க்கதரிசனங்களை மறுப்பதற்கான உந்துதல் என்ன? தர்க்க ரீதியாக அவர்களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கும் ஒருவரைப் பற்றி பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்களை சிலர் மாற்றியதாக நம்மால் நம்ப முடியுமா? தீர்க்கதரினங்களை மாற்றியதால், அவர்கள் கடவுளின் சாபத்தைப் பெற்றார்கள். அவர்கள் நித்திய ஜீவனை இழந்தார்கள். அவர்களின் சந்ததியினரும் வாழ்க்கையை இழந்தார்கள். அவர்களின் சந்ததியினர் அடிமைகளாக ஆனார்கள். சொல்லப்போனால், அவர்களின் சந்ததியினர் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக ஆனார்கள். இப்படிச் சொல்வதை நாம் நம்ப முடியுமா? அவர்கள் இன்றைய வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் எந்த காரணத்திற்காக இழந்தார்கள்? அவர்கள் நித்திய வாழ்வையும் இழந்தார்கள். எல்லா சிலாக்கியங்களையும் இழந்தார்கள். இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் அவற்றையெல்லாம் பெற்றிருக்கலாம் ‒ இப்படிச் சொல்வதில் அர்த்தமிருக்கிறதா? முஸ்லீம்கள் தங்களின் நம்பிக்கைகள் மற்றும் இஸ்லாம் இந்த வாழ்க்கை மற்றும் மறுமை பற்றி என்ன கற்பிக்கிறது என்பதை விமர்சன ரீதியாக சிந்திக்க அவர்களுக்கு உதவி செய்வதில் நாம் சோர்ந்து போகக் கூடாது. கடவுள் அவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப் பெறும்படி மனந்திரும்புதலை வழங்குவார் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ய வேண்டும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 02:20 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)