Previous Chapter -- Next Chapter
18. எங்கும் ஒளிய முடியாது (யோபு 34:22) = நம்பிக்கையற்றவர்களுடனான விவாதங்களில் நடுநிலையாக இருக்க முடியாமை
அவநம்பிக்கையாளர்களுடனான நம்முடைய கலந்துரையாடலில் ஒரு நடுநிலையான இடத்தை நாம் எடுக்க முடியாது என்பதை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. வாழ்க்கையைக் குறித்த நம்முடைய கண்ணோட்டம் முழுவதும் மாறுபட்டதாக இருக்கிறது. அப்படியே நாம் கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் தனிப்பட்ட முறையில் நம்மை ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும். நாம் அவநம்பிக்கையாளர்களுடன் பேச்சைத் தொடங்குவதற்குக் கூட ஒரு பொதுவான தளம் ஒன்று இருக்கிறதா?
கடவுளுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பமாக இருப்பதாலும், அவநம்பிக்கையாளர்கள் முற்றிலும் வேறுபட்டதும் எதிரானதுமான சிந்தனை முறைக்குத் தங்களை ஒப்படைத்திருப்பதால், நாம் கடவுளுடைய சிந்தனைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் கோருவதைப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கிலாந்து நாட்டில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கம் மக்களுடைய நம்பிக்கைகளை அடையாளம் காண்பது (பார்க்க: W. Shipton, Worldviews and Christian Education, p. 92-93). இந்த அட்டவணையைப் பார்க்கும்போது உலக நோக்குகளிடையில் கிட்டத்தட்ட ஒரு பகுதியிலும் உடன்பாடு இல்லை.
இயற்கைவாதம் மதச்சார்பற்ற மனிதவியல் | வேதாகம கிறிஸ்தவம் | அனைத்திலும் கடவுள் - புதிய கால கோட்பாடு | |
---|---|---|---|
இறுதி மெய்மை | எப்போதும் இருக்கும் அசையாத பொருள் மற்றும் சக்தி | எப்போதும் இருக்கும் அசையாத பொருள் மற்றும் சக்தி | ஆன்மீக அண்டம் – கடவுளாக, மனமாக, ஒன்றாக, எல்லாமுமாக இருப்பது |
கடவுளின் தன்மை | கடவுள் என்பது மனித கற்பனை. அப்படி ஒன்றில்லை | அனைத்து ஒழுக்கத்திற்கும் ஆதாரமானவரும், அனைத்தையும் ஆள்பவரும், அனைத்தையும் அறிந்தவரும், எப்போதும் படைப்பாளியாக இருப்பவருமாகிய தனிப்பட்ட திரியேக கடவுள் | ஆள் தன்மையற்ற, ஒழுக்கத்தைப் பற்றிய அக்கறையற்ற கடவுள்/ மனம்/ஒன்று/எல்லாம் |
உயிர்கள் மற்றும் அண்டத்தின் தொடக்கம் | இந்த அண்டம் நித்தியமானது. ஒரு மூடப்பட்ட அமைப்புக்குள் காரணங்கள் மற்றும் விளைவுகள் ஆகியவற்றின் ஒத்த தன்மையினால் இயங்குவது. அல்லது இவ்வுலகம் திடீரென்று விளக்க முடியாதபடி தோன்றி விட்டது | ஒரு திறந்த அமைப்புக்குள் காரணம் மற்றும் விளைவின் ஒத்த தன்மையால் இயங்கும்படி கடவுளின் வல்லமையுள்ள வார்த்தையினால் படைக்கப்பட்டது | நித்தியமான கடவுள், மனம், ஒன்று அல்லது எல்லாம் என்பதின் வெளிப்பாடு |
உண்மையை அறிந்துகொள்ளும் வழிகள் | மனித பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான முறையின் மூலம் செயல்படுவதும் உறுதி செய்யப்படுவதுமான உள்ளுணர்வு | வேதாகமத்திலும் இயேசு கிறிஸ்துவிலும் கடவுள் தம்மை வெளிப்படுத்தியுள்ளதுமனிதனுடைய மனசாட்சி மற்றும் பகுத்தறிவு பரிசுத்த ஆவியினால் ஒளியூட்டப்பட்டு அனுபவத்தில் உறுதிசெய்யப்படுவதன் மூலம் | பயிற்சி பெற்ற முறையில் உள்ளார்ந்த தேடலுடன் கடவுள், மனம், ஒன்று, அனைத்தின் மூலமாக வரும் வெளிப்பாடுகள் |
மனிதர்களின் தன்மை | சிக்கலான “இயந்திரங்கள்”; ஆகக்கூடிய பரிணாம வளர்ச்சியடைந்த மிருகங்கள் | உடலும் ஆன்மாவும் உள்ள ஆள்தன்மையுடையவர்களாக கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். ஒழுக்கரீதியாக தீர்மானங்களை எடுக்கக்கூடியவர்கள். இப்போது விழுந்துபோன நிலையில் இருப்பவர்கள் | ஆனமீக உயிர்கள் கடவுள், மனம், ஒன்று, அனைத்தின் பகுதியாக இருக்கும் இவர்கள் தற்காலிகமாக மாயமான பொருள் சார்ந்த உலகில் வாழ்கிறார்கள் |
மனித வாழ்வின் நோக்கம் | சுய திருப்தி, மகிழ்ச்சி அனுபவித்தல், சேவை, அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ உழைத்தல் | கடவுளோடு அன்பின் உறவை நிலைநாட்டுவது, தங்கள் திறமைகளை அறிந்துகொள்வது, சக மனிதர்களுக்குச் சேவை செய்வது, இந்த உலக வாழ்வை அனுபவித்து, இனிவரும் நித்திய வாழ்வுக்கு ஆயத்தமாவது | ஒருவர் கடவுள், மனம், ஒன்று, அனைத்து – உடன் ஒன்றாகக் கலக்கும் வரை வளர்ச்சி அல்லது பின்னடைவில் மாற்றத்திற்கு உள்ளாவது |
ஒழுக்கத்தின் அடிப்படை | பெரும்பான்மையானவர்களின் கருத்து, தற்கால சிந்தனைகள், சிறப்பான பாரம்பரியம், குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் அல்லது தனிப்பட்டவருடைய மனசாட்சி | கிறிஸ்துவிலும் வேதாகமத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளின் மாறாத குணாதிசயங்கள் (நீதி மற்றும் இரக்கம்) | உள்ளுணர்வுகள் மற்றும் நாட்டங்கள்; நடத்தையில் “சரி” என்றும் “பிழை” என்றும் எதுவும் கிடையாது |
மானுடத்தின் இக்கட்டான நிலை | யதார்த்தத்தையும் மனிதனுடைய உண்மையான சக்தியையும் குறித்த அறிவின்மை; தவறான சட்டங்கள், திறனற்ற அரசுகள், மானிடரிடையே சரியான புரிதலும் ஒன்றித்த செயல்பாடும் இல்லாமை; அசுத்தப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் | பாவம் கடவுளுக்கும் அவருடைய விதிமுறைகளுக்கும் எதிரான மனப்பூர்வமான கலகம் ஆகும். மனிதன் சுய நிறைவுடைய சுயாதீன ஆட்சியாளராக தன்னையே அரியணை ஏற்ற முயற்சித்தல்; இவற்றின் காரணமாக மனிதனிலுள்ள கடவுளின் சாயல் மங்கி முழு உலகமும் பாதிக்கப்படுகிறது | மனிதனுடைய உண்மையான சக்தியையும் யதார்த்தையும் குறித்த அறிவின்மை; இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகோடு தொடர்பு கொள்ள இயலாமை; சூழலியல் சமநிலையைக் கவனிக்கத் தவறுவது |
மனிதனின் இக்கட்டான நிலைக்கான தீர்வு | சிறப்பாக கல்வி, அறிவியலுக்கு அதிக ஆதரவு, தொழில்நுட்ப வளர்ச்சி, நீதியுள்ள சட்டங்கள், திறனுள்ள அரசு, மனித உறவுகளிலும் இணைந்த செயல்பாடுகளிலும் முன்னேற்றம், உயிர்ச்சூழலைப் பராமரித்தல் | ஆன்மீக மறுபிறப்பு இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் மீட்பின் நம்பிக்கை வைப்பதில் தொடர்புள்ளது. இது கடவுளுக்கு கீழ்ப்படியவும், சரியான சுய புரிதலையும், சரியான மனித உறவுகளையும் படைப்புகளைப் பராமரிப்பதையும் நோக்கி மனிதர்களை வழிநடத்தும் | மனசாட்சியில் ஏற்படும் மாற்றம் சரியான சுய புரிதலையும், சுமூகமாக சமூக உறவையும், சுய மீட்பையும் நோக்கி மனிதர்களை வழிநடத்தும் |
மரணம் | மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களுக்குமான இறுதி முடிவு | இன்னொரு உணர்வுள்ள நிலையின் ஆரம்பம் | ஒரு மாயத் தோற்றம்; அண்ட வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லுதல் |
மனித வரலாறு | முன்னறிவிக்கப்பட முடியாதது, எந்த நோக்கமும் இல்லாமல், மனித தீர்மானங்களினாலும் மனிதனுக்கு அப்பாற்பட்ட காரணிகளினாலும் நிர்ணயிக்கப்படுவது | மனிதனுடைய சுயாதீன தீர்மானங்களினால் வழிநடத்தப்பட்டாலும் கடவுளுடைய கண்காணிப்பின் கீழ் நிகழும் பொருளுள்ள நிகழ்வுகளின் தொடர்ச்சி. அனைத்துக்குமான கடவுளின் இறுதி திட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்வது | மாயத்தோற்றம் மற்றும், அல்லது வட்டப்பாதையில் மீண்டும் மீண்டும் நிகழ்வது |