Home -- Tamil -- 17-Understanding Islam -- 029 (Christ’s miraculous conception)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து
6.1. கிறிஸ்துவின் அற்புதக் கருத்தரிப்பு
ஜிப்ரீல் (கபிரியேல்) இறை தூதனின் வருகையின் மூலம் மரியாள் இயேசுவை எவ்வாறு கருத்தரித்தார் என்பதை நாம் குர்ஆனில் வாசிக்கிறோம்:
"மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லா உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாவை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்." (அல்குர்ஆன் 66:12)
குர்ஆன் விரிவுரையாளர் இப்னு கதீர் கூறுகிறார்:
"நம்முடைய ரூஹ் மூலமாக நாம் அதில் (அந்தரங்கப் பகுதியை) ஊதினோம், அதாவது வானவர் ஜிப்ரீல் மூலமாக. அல்லா ஜிப்ரீல் என்ற வானவரை மர்யமிடம் அனுப்பினான். அவளது ஆடையின் ஒரு இடைவெளியில் ஊதுமாறு அல்லா அவனுக்குக் கட்டளையிட்டான், அந்த மூச்சு அவளது அந்தரங்க பகுதி வழியாக அவளது கருப்பைக்குள் சென்றது; இவ்வாறுதான் 'ஈஸா (அலை) அவர்கள் கருவுற்றார்கள். (இப்னு கதீர், குர்ஆன் விளக்கவுரை 66:12).