Previous Chapter -- Next Chapter
அத்தியாயம் 12: பைபிளிலும் குர்ஆனிலும் உள்ள தலைப்புகளின் ஒரு சுருக்கமான ஒப்பீடு
இந்த அத்தியாயம் இந்தப் பகுதிகளில் எதையும் ஆழமாக விவாதிக்காது; இது ஒரு மேலோட்டப் பார்வையை மட்டுமே வழங்கும். வேறுபாடுகள் உள்ள பகுதிகளை அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் கையாள்வேன், ஏனென்றால் உங்கள் விவாதத்தின் பெரும்பான்மையான பகுதி இதிலே கவனம் செல்லக்கூடும்.
முஸ்லீம்கள் சில விஷயங்களை சுலபமாக எடுத்துக்கொள்கிறார்கள், அவர்களின் வலைப்பின்னலான நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள அதிக காலம் ஆகலாம். கேள்விகள் கேட்பது நல்லது, அவர்களின் பதில்களை அடிக்கடி கேள்விக்குள்ளாக்குவதைத் தவிர்க்கவும். முஸ்லீம்கள் பொதுவாக நீங்கள் நம்பும் விதமாக பதில்சொல்ல முயற்சிசெய்வார்கள், ஆனால் அது உண்மையாக அவர்கள் நம்பும் பதிலாக இருக்க வேண்டியதில்லை! உங்கள் கேள்வியை உங்கள் தொடர்பு நபர் தவிர்த்தாலோ, மாற்றியமைத்தாலோ கூட, அவர்கள் வேண்டுமென்றே கேள்வியைத் தவிர்த்துள்ளனர் என்பதை அறிவார்கள், பின்னர் அதைப் பற்றி சிந்திப்பார்கள் அல்லது கேட்பார்கள். எனவே, ஒவ்வொரு தர்க்கவியல் வாதத்திலும் வெற்றிபெறுவது குறித்து மிகவும் கவலைப்பட வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் இது எதிர் விளைவுகளை உண்டுபண்ணும் (நபரை இழக்க நேரிடும்) உண்மையில் இது அவசியமும் இல்லை. இஸ்லாமியர்கள் என்ன நம்புகிறார்கள் என்பதைப் பற்றி பேசுவோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களுடன் ஒத்துப்போகும் விஷயங்கள், உடன்படாத விஷயங்கள், இஸ்லாம் எதையும் சொல்லாத கிறிஸ்தவ நம்பிக்கைகளின் அடிப்படை கருத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். இதுபோன்ற விஷயங்களைப் பற்றிய அறிவு பரஸ்பர உரையாடல்களில் ஈடுபடும்போது உதவியாக இருக்கும். எவ்வாறாயினும், பைபிளில் நாம் உபதேசத்தில் முஸ்லீம்களுடன் எதிலும் உடன்படக்கூடாது என்பதை நான் கவனிக்க விரும்புகிறேன்:
நம்முடைய கருத்து வேறுபாடு என்பது, நாம் கொண்டிருக்கும் மற்ற அனைத்து நம்பிக்கைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் ஒரு முழு உலகக் கண்ணோட்டத்தைப் பற்றியது. எனவே, முஸ்லீம்களுடன் ஏதாவதொன்றில் நாம் ஒத்துப்போகும்போது, நாம் ஏன் உடன்படுகிறோம் என்பதைக் கவனித்து, ஏன் சில விஷயங்களில் நாம் ஒத்துப்போகிறோம் என்று நம்மையே கேள்வி கேட்டு, அது நம்மை எங்கே கொண்டுசெல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.