Home -- Tamil -- 17-Understanding Islam -- 067 (Areas of disagreement)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 12: பைபிளிலும் குர்ஆனிலும் உள்ள தலைப்புகளின் ஒரு சுருக்கமான ஒப்பீடு
12.2. உடன்பாடில்லாதப் பகுதிகள்
- குர்ஆன் என்பது அல்லாவிடமிருந்து வந்த இறுதி வேதம். அது படைக்கப்படாததும் நித்தியமானதும் ஆகும்; அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் எழுத்தையும் அவர்கள் "பாதுகாக்கப்பட்ட எழுதும் பலகை" என்று அழைக்கின்றனர். இது பெரும்பாலான முஸ்லீம்கள் உறுதியாகக் கடைப்பிடிக்கும் ஒரு கொள்கை.
- இயேசு கிறிஸ்து "இன்ஜீல்" என்ற நற்செய்தி புத்தகத்துடன் இஸ்ரவேல் மக்களிடம் அனுப்பப்பட்டார். இஸ்லாமிய கருத்துப்படி, இந்தப் புத்தகம் மாற்றப்பட்டுள்ளது, அதேபோல் தோராவும் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், "தோரா" என்றால் என்ன என்பதைக் குறித்து இஸ்லாமியத்தில் தெளிவான கருத்து இல்லை. சில சமயங்களில் அது மோசேயின் ஐந்து புத்தகங்களை தெளிவாகக் குறிக்கிறது, ஆனால் வேறு சில இடங்களில் பழைய ஏற்பாடு முழுவதையும் குறிப்பதாகத் தோன்றுகிறது.
- எல்லா தீர்க்கதரிசிகளும் தூதர்களும் தவறற்றவர்கள். இதனால், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ள தீர்க்கதரிசிகளின் பாவங்களுக்கு விளக்கம் அளிப்பதில் முஸ்லீம்களுக்கு சிரமம் உள்ளது.
- ஜென்ம பாவம் இல்லை, ஒவ்வொரு மனிதனும் பாவமற்றவனாகவும் குற்றமற்றவனாகவும் பிறக்கிறான்.
- கிறிஸ்து வெறும் படைக்கப்பட்ட மனிதர் என்பதே இஸ்லாமியக் கண்ணோட்டம். இயேசு தாம் கடவுள் என்று ஒருபோதும் கூறவில்லை என்றும், கிறிஸ்தவர்கள் (குறிப்பாக அப்போஸ்தலர் பவுல்) அவரை கடவுளாக மாற்றினார் என்றும் முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.
- அல்லா ஒருபோதும் ஒரு மனிதனாக மாற முடியாது; அவதாரம் என்பது முற்றிலும் மறுக்கப்படுகிறது.
- திரித்துவத்தை நம்புவது பலதெய்வ வழிபாடு ஆகும், இது மன்னிக்க முடியாத ஒரே பாவம் ஆகும் என்று நம்புகிறார்கள்.
- கிறிஸ்து இன்னும் பரலோகத்தில் உயிரோடு இருக்கிறார், கடைசி நாளுக்கு முன்பு அவர் மீண்டும் வருவார்.
- முகமதுவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம் என்ற கருத்தை ஆதரிப்பதாகத் தோன்றும்படி திரித்துக்கூற உதவும் பைபிளில் ஒரு சில வசனங்களைத் தவிர, முஸ்லீம்கள் பொதுவாக பைபிளில் உள்ள எதையும் நிராகரிக்கிறார்கள். பைபிள் குர்ஆனுடன் ஒத்துப்போனால், அது அவர்களுக்குத் தேவையற்றது என்று நம்புகிறார்கள், ஆனால் அது குர் ஆனுடன் முரண்படுகிறது என்றால், அதை அவர்கள் வேண்டாம் என்கின்றனர்.