Previous Chapter -- Next Chapter
12.3. இஸ்லாமியர் அறியாத கிறிஸ்தவ நம்பிக்கைகள்
- மூலப் பாவம்.
- ஒவ்வொருவரும் பாவியாகவே பிறக்கிறார்கள்.
- ஒவ்வொரு மனித மனசாட்சியிலும் கடவுள் ஒரு நீதிநெறி விதியை வைத்துள்ளார்.
- கடவுள் பரிசுத்தமானவர், பாவத்தைப் பார்க்க மாட்டாதவர்.
- மீட்பின் தேவை.
- நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாது.
- பலியின் அவசியம்.
- கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்.
இது ஒரு விரிவானப் பட்டியல் அல்ல என்றாலும், இது ஒரு பயனுள்ள உரையாடலுக்கு உதவும் சில முக்கியமான அம்சங்களை வழங்குகிறது. நாம் எதை நம்புகிறோம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அந்த நம்பிக்கையைப் பற்றிய வலுவான கருத்துக்களை கொண்ட ஒருவருடன் உரையாடுவதை நாம் காணலாம். ஒரு முஸ்லீமை ஆராய்ந்து பார்க்கும் ரீதியாகவும் தொடர்ச்சியாகவும் சிந்திக்க வைப்பது ஒரு முன்னேற்றப் படியாக இருக்கும். உதாரணமாக, ஒரு முஸ்லீம் கிறிஸ்தவர்கள் முன்கூட்டியே கழுவாமல் ஜெபிப்பதை விமர்சிக்கும்போது, ஜெபத்தின் ஆவிக்குரிய அர்த்தம் மற்றும் ஜெபத்திற்கு ஆவிக்குரிய ரீதியாக ஆயத்தப்படுவதன் முக்கியத்துவம் பற்றி பேசலாம். வெளிப்புற தோற்றத்தை விட இது எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தலாம். இவ்வாறு, பௌதீகத்தின் பின்னாலுள்ள ஆவிக்குரிய முக்கியத்துவத்தை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.