Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 069 (CHAPTER THIRTEEN: MUSLIM OBJECTIONS TO CHRISTIANITY)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்

அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு


இந்த அத்தியாயத்தில், இஸ்லாமிய இறையியல் கொள்கைகளில் கிறிஸ்தவ மதத்துடனுள்ள கருத்து வேறுபாடுகளை ஆராய்வோம். இந்தப் பிரிவில் இப்பகுதி மிகவும் விரிவாக இருக்கும் என்றாலும், அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை இது வழங்காது. இருப்பினும், கிறிஸ்தவ செய்திக்கு எதிரான பொதுவான இஸ்லாமிய மறுப்புக்களை எதிர்பார்த்து அவற்றைக் கையாள்வதில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த மறுப்புக்களை பெரும்பாலும் எளிதாகவே கையாள முடியும், அடிப்படை பகுப்பாய்வின் மூலம் இவை செல்லாது என நிரூபித்துவிடலாம். சில சமயங்களில், நமது தொடர்புகளை இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் ஒரே மாதிரியான விமர்சனத்தை அவர்கள் கடைப்பிடிப்பார்களா என்று கேட்பது அவசியம். கிறிஸ்தவத்தில் ஏதோ ஒன்றை எதிர்த்துப் பேசும் அதே நேரத்தில் இஸ்லாத்தில் அதே விசயத்தை ஏற்றுக்கொள்வது என்பது தெளிவான இரட்டை நிலைப்பாடாகும், அது நியாயமற்றது. (உதாரணமாக, சிலுவைப் போர்களை எதிர்த்துக் கேள்வி எழுப்புவது, ஆனால் ஆர்மீனிய படுகொலைகளை அல்லது மதீனாவில் முகமது யூதர்களை படுகொலை செய்ததை ஏற்றுக்கொள்வது போன்றவை). கிறிஸ்தவர்கள் அல்லாதவதர்களிடமிருந்து வரும் பொதுவான கிறிஸ்தவத்திற்கு எதிரான எதிர்ப்புகள், கடவுள் இல்லை என்றக் கருத்து அல்லது கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் பிற சமயக் கொள்கைகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் போன்றவற்றை விளக்குவதைவிட, பொதுவாக இஸ்லாமியர் காண்பிக்கும் எதிர்ப்புகளுக்கு சில பதில்களை அளிக்க முயற்சிப்பேன்.

முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களுடனான எந்த மத விவாதத்தையும் குர்ஆனில் வழங்கப்பட்ட முறையில் அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லீம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக. (குர்ஆன் 29:46)

இதற்கு அர்த்தம் என்னவெனில்:

  1. குர்ஆன் நல்ல வார்த்தைகளாலும் நல்ல முறையிலும் வாதாட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
  2. முகமதுக்கு முன் வந்த வேதங்களை அவர்கள் நம்ப வேண்டும்.
  3. கிறிஸ்தவர்களும் யூதர்களும் வணங்கும் அதே கடவுளையே தாங்களும் வணங்குவதாகவும், அவருக்கு நாமெல்லாம் கீழ்ப்படிவது அவசியம் என்றும் அவர்கள் நம்ப வேண்டும்.

பேச்சு வாக்குவாதமாக மாறினால், குர்ஆன் என்ன கற்பிக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது அவசியம் இருக்கலாம்.

இப்போது, இஸ்லாமிய எதிர்ப்புகள் பொதுவாக இந்த வகைகளில் ஒன்றில் வரும், அவற்றை ஒவ்வொன்றாகக் கலந்து ஆராய்வோம்.

  1. குர்ஆன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மூல பைபிள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை.
  2. முஸ்லீம்களால் அடிக்கடி எழுப்பப்படும் ஒரு சவால் என்னவென்றால், குர்ஆன் வந்தவுடன் பைபிள் ரத்துசெய்யப்பட்டது அல்லது ஒழிக்கப்பட்டது மற்றும் அந்த இடத்தை குர்ஆன் எடுத்துக்கொண்டது என்ற நம்பிக்கை.
  3. திரித்துவத்தைப் பற்றிய எதிர்ப்பு.
  4. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றிய எதிர்ப்புகள்.
  5. முகமது பற்றிய தீர்க்கதரிசனங்கள் பைபிளில் உள்ளன என்று உரிமை கோருவது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 12:52 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)