Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 026 (PILLAR 6: Jihad (holy struggle))
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 4: இஸ்லாத்தின் தூண்கள்

4.6. தூண் 6: ஜிகாத் (புனிதப் போராட்டம்)


இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஜிஹாத் என்பது சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது. சில அறிஞர்கள் இதனை ஐந்தாவது தூணாக ஹஜ்ஜுக்கு பதிலாகக் கருதுகின்றனர். பெரும்பாலானோர் இது ஒரு கூடுதலான ஆறாவது தூணாகக் கருதுகின்றனர். தற்காலத்தில், போராடும் இஸ்லாத்தின் தாக்கத்தால், இஸ்லாமிய அல்லாதோர் மத்தியில் ஜிஹாத் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. முஸ்லீம் அறிஞர்களால் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஜிஹாதும் ஒன்று. இது என்ன, இது எது அல்ல என்பது குறித்து முஸ்லீம்களிடையே மிகக் குறைவான உடன்பாடு காணப்படுகிறது. இஸ்லாமிய மிதவாதிகள் பொதுவாக 'ஜிஹாத்' என்ற வார்த்தைக்கு 'புனிதப் போர்' என்று பொருள் இல்லை, 'போராட்டம்' என்றுதான் பொருள் என்று விளக்க முயற்சிக்கின்றனர். மேலும், இந்த போராட்டம் கட்டாயமாக பலத்தை பயன்படுத்துவதன் மூலமாக இருக்க வேண்டியதில்லை என்றும் விளக்குகின்றனர். உண்மையில், இது தொழில்நுட்ப ரீதியாக (technically) சரி; ஜிஹாத் என்பது உள் போராட்டம் என்பதைக் குறிக்கலாம். என்றாலும், இஸ்லாமிய ஆதாரங்களிலிருந்து பார்க்கும்போது, பெரும்பாலும் இது ஆயுதமேந்திய போராட்டத்தைக் குறிப்பிடுவதாகவே இருக்கிறது. இஸ்லாத்தை அரசின் மதமாகவும், இஸ்லாமிய சட்டங்களை நாட்டின் சட்டங்களாகவும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆயுத போராட்டத்தைக் குறிப்பிடுவதாகவே இருக்கிறது.

இஸ்லாத்தில் ஜிஹாதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, நாம் ஹதீஸ்களையும் குர்ஆனையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். முகமது நபி ஜிஹாதின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக இவ்வாறு கூறினார்:

"அல்லாவின் நோக்கத்திற்காக (ஜிஹாதில்) போர் செய்பவர்களுக்காக வாளின் நிழல்களின் கீழ் சொர்க்கம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்." (புஹாரியின் ஹதீஸ், 2818)

ஹதீஸ்களில் வேறு சில பகுதிகளில், முகமது நபி ஜிஹாதிற்காகவே தான் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்:

"மக்கள் அல்லாவைத் தவிர வேறு எந்த தெய்வமும் வணக்கத்திற்குரியது இல்லை என்று சாட்சி சொல்லும் வரை, என்னை நம்புவதோடு, நான் கொண்டு வந்ததையும் நம்பும் வரை போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அவர்கள் இதைச் செய்தால், அவர்களின் உயிரும், செல்வமும் என்னால் பாதுகாக்கப்படும். உரிய கடமை தவிர, அவர்கள் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்களின் கணக்கு (மறுமை நாள் கணக்கு) அல்லாவிடமே இருக்கும்." (இந்த கருத்திற்கு முஸ்லீம் மற்றும் புகாரி இதில் உடன்படுகின்றனர்).

எனவே, மக்களை அல்லாவை வணங்கச் செய்வதையும், முகமது நபியைப் பின்பற்றச்செய்வதுமே ஜிஹாதின் முக்கிய குறிக்கோளாக இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர். இதே குறிக்கோளையே குர்ஆனும் குறிப்பிடுகிறது:

“ஃபித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.” (குர்ஆன் 2:193)

வேறு சில இடங்களில், முகமது நபி வன்முறையைக் குறிக்கும் வகையில் ஜிஹாதைப் பற்றி பேசியதாகக் கூறப்படுகிறது:

‘என் உயிர் யார் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணை! நான் உங்களிடம் வந்தது வெட்டுவதற்கே அன்றி வேறு எதற்காகவும் அல்ல’ (Sahih Ibn Haban),

மேலும்

”‘நான் தண்டனை நாளுக்கு முன்பாக வாளுடன் அனுப்பிக்கப்பட்டேன். என் வாழ்வாதாரம் என் ஈட்டியின் நிழலிலேயே உள்ளது. என் கட்டளையை மீறுபவர்கள் மீது அவமானமும் அடிபணிதலும் இருக்கும்’ (Musnad Ahmad).

முகமது நபி ஜிஹாதை நிலையான இலக்காகக் கொண்டு வந்தார். மேலும், ‘ஜிஹாதை விட்டுவிடாதீர்கள்’ என்று முஸ்லீம்களை எச்சரித்தார்:

இனா என்னும் வர்த்தகத்தில் ஈடுபட்டு, மாட்டு வால்களைப் பிடித்துக்கொண்டு, வேளாண்மையைக் கொண்டாடி, ஜிஹாத்தை (அல்லாவின் பாதையில் போராட்டத்தை) விட்டுவிட்டால், அல்லா உங்கள் மீது அவமானத்தை ஏற்படுத்துவான். நீங்கள் உங்கள் பழைய இஸ்லாம் மார்க்கத்திற்கு திரும்பும் வரை அதை நீக்க மாட்டான்” (Sunan Abi Dawud).

இனா என்பது வட்டி வியாபாரத்தைக் குறிக்கும். முகமது நபி சொல்ல விரும்பியது என்னவென்றால், வாழ்வாதாரம் பாரம்பரிய வர்த்தக அல்லது வேளாண்மை தொழில்களிலிருந்து வருவதில்லை, மாறாக அது ஜிஹாத்திலிருந்தே வருகிறது. அந்த ஜிஹாத் முழு உலகமும் இஸ்லாத்திற்கு கீழ்ப்படியும் வரை ஓயாது என்றார்.

எனவே, ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜிஹாத் பற்றி முகமது நபி கூறியதைக் காண்கிறோம். ஜிஹாத் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? குர்ஆனில், போர் படிப்படியாக வந்தது என்று கருத்து இருக்கிறது: முதலில் தற்காப்பு, பின்னர் தாக்குதல். பின்வரும் வசனங்களில் காலப்போக்கில் ஜிஹாத் என்ற கருத்தின் வளர்ச்சியைக் காண்கிறோம்:

“உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை..” (குர்ஆன் 2:190)
“(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.” (குர்ஆன் 2:191)
“(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.” (குர்ஆன் 8:39)
“போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (குர்ஆன் 2:216)
“எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.” (குர்ஆன் 4:74)
“(அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.” (குர்ஆன் 4:89)
“ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லா மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.” (குர்ஆன் 4:95)
“அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.” (குர்ஆன் 8:60)
“நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்)..” (குர்ஆன் 8:65)
“நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.” (குர்ஆன் 9:14)
“வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.” (குர்ஆன் 9:29)
“(நபியே!) நீர் கூறுவீராக "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?" ஆனால் உங்களுக்கோ அல்லா தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் எள்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்..” (குர்ஆன் 9:52)
“(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜக்காத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லா மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.” (குர்ஆன் 9:5)

அவ்வாறே, குர்ஆனும் ஹதீஸ்களும் முஸ்லீம்களை அல்லாவின் ஆட்சியை பூமியில் (மொத்த பூமியிலும்) எந்த வழியிலாகிலும் நிலைநாட்டுவதற்காக போராட கட்டளையிடுவதை இதன் மூலம் காணலாம். முஸ்லீம்கள் இதை ஒரு வெற்றி விளையாட்டாகக் கருதுகின்றனர், இதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும், அனைத்து முஸ்லீம் அல்லாதவர்களும் தோற்க வேண்டும். சில சுன்னி அறிஞர்கள், இஸ்லாம் உலகின் அனைத்து நாடுகளிலும் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை, ஜிஹாத் என்பது முஸ்லீம்களுக்கு கடமை என்று கூறுகின்றனர். சில சுன்னி அறிஞர்களின் கருத்துப்படி, ஒவ்வொரு நாடும் இஸ்லாமிய சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட வேண்டும், ஆனால் அனைவரும் முஸ்லீமாக மாற வேண்டியதில்லை. மேற்கண்ட வசனங்களின்படி, முஸ்லீம் அல்லாதவர்களின் நிலை விளக்கப்படுகிறது: கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள், மேற்கண்ட வசனங்களின்படி, வயது வந்த, சுதந்திரமான, மனநிலை சரியான ஆண் முஸ்லீம் அல்லாதவர்களிடம் விதிக்கப்படும் ஆண்டுதோறும் வரி (ஜிசியா) செலுத்தும் வரை தங்கள் நம்பிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஜிசியாவுக்கு எந்த ஒரு நிர்ணயிக்கப்பட்ட விகிதமும் இல்லை, இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் வரலாற்று ரீதியாக ஆட்சியாளரின் தேவை அல்லது விருப்பத்தைப் பொறுத்து அதிகரிக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ செய்தது. கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது அல்லது இறப்பது ஆகிய இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்ற கருத்து இருக்கிறது. சில அறிஞர்கள், முஸ்லீம்கள் பலவீனமாக இருக்கும்போதும், தங்கள் எதிரிகளை தோற்கடிக்க முடியாத நிலையிலும் மட்டுமே முஸ்லீம் அல்லாதவர்களுடன் சமாதான ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் வலிமை பெறும் வரை அமைதியாக காத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறி ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 20, 2026, at 03:24 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)