Previous Chapter -- Next Chapter
6. கிறிஸ்தவ கொள்கைக் காப்புவாதத்தின் இலக்கு யார்?
ஒரு உயர்ந்த இலக்கை நமக்குத் தந்து கிறிஸ்தவ கொள்கைக் காப்பு வாதத்தின் மாபெரும் பணியை பேதுரு விளக்குகிறார்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15)
நம்முடைய நம்பிக்கையைப் பற்றி கேட்கிற ஒவ்வொருவரும் நம்முடைய கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையில் இலக்காயிருக்கிறார்கள். அதாவது, நாம் நம்முடைய அயலகத்தாருக்கு மட்டுமல்ல, முற்றிலும் அந்நியர் ஒருவருக்கும் அல்லது பல்கலைக்கழக பேராசிரியருக்கும் அல்லது நம்முடைய பணித்தளத்தில் உள்ள முதலாளிக்கும் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இருப்பினும், நாம் எல்லாரிடத்திலும் சென்று சண்டையை ஆரம்பிக்கக்கூடாது மாறாக, “நம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கு” எளிமையாகவும் தெளிவாகவும் பதிளிக்க வேண்டும் என்பதுதான் பேதுரு இங்கு குறிப்பிடுவதாகும்.
ஆனால், கெடுவாய்ப்பாக இன்றைய கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளர்கள் பேதுருவின் ஆலோசனைக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். பெரும்பான்மையாக கிறிஸ்தவ காப்புரை பிரிவுகள் தங்கள் முறையைப் பின்பற்றும் கிறிஸ்தவ காப்புரையாளர்கள் நடுநிலை என்று அழைக்கப்படும் நிலை எடுத்து கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஓரத்தில் வைத்துவிட்டு நம்பிக்கையற்றவர்களோடு வாதிடும்படி கோருகிறது. பேதுருவோ நாம் கிறிஸ்துவை நம்முடைய உள்ளங்களில் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்கிறார். அதாவது, நாம் கிறிஸ்துவில் ஆரம்பிக்க வேண்டும், கிறிஸ்துவில் முடிப்பதல்ல.
நாம் கிறிஸ்துவை இறுதியாக அதிகாரமாக முன்வைக்கிறோம். கடவுளைவிட உயர்ந்தவர் யாரும் இல்லாத காரணத்தினால் நாம் இப்படிச் செய்கிறோம். கடவுளின் இறுதித் தன்மையை நிறுவுவதற்கு கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கும் அளவுகோலுக்கு அப்பால் உள்ள எதையும் நோக்கி தீர்ப்புக் கோர முடியாது. நாம் ஒரு நடுநிலையான தளம் இருப்பதாகக் கருதி அவநம்பிக்கையாளர்களுக்கு இணங்கிப் போனால் கிறிஸ்துவில் அனைத்து ஞானமும் பொதிந்திருக்கிறது என்பதை நாம் மறுப்பவர்களாக இருக்கிறோம். கடவுளின் அதிகாரத்தை மறுப்பது குருடர்கள் குருடர்களை வழிகாட்டும் நிலைக்குத்தான் இட்டுச் செல்லும், வேறு வழியில்லை (மத். 15:14).