Previous Chapter -- Next Chapter
29. கடந்து நிற்கும் மருளியல்வாத (transcendent mysticism) உலக நோக்குக்கு பதிலுரைத்தல் -- இந்துமதம்
மெய்மை என்பது நம்முடைய புரிதலுக்கும் அனுபவத்திற்கும் அப்பாற்பட்டது என்றும் நாம் வாழ்கின்ற இந்த உலகம் வெறும் மாயத் தோற்றமே என்றும் இந்த மாயத் தோற்ற நிலையில் மெய்மையை நாம் அறிந்துகொள்ள முடியாது என்றும் இந்த உலக நோக்குகள் நம்புகின்றன. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அனைத்தையும் தெய்வம் என்று கருதும் இந்து மதத்தின் ஒரு பிரிவைக் கூறலாம். இறுதி மெய்மையாகிய பிரம்மனோடு நாம் இரண்டறக் கலக்கும்போது அனைத்து வேறுபாடுகளும் இருக்காது என்றும் இந்த உலகத்துடன் மனித இனமும் அந்த பிரம்மன் என்ற ஒன்றின் தொடர்ச்சியான இருப்பே என்றும் இந்த நோக்கு மேலும் நம்புகிறது. இப்போது தனிப்பட்ட நபர்களாக இருப்பவர்கள் (ஆத்மாக்கள்) அண்டத்தின் மனசாட்சியோடு ஆள்தன்மையற்ற முறையில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். மனித குலத்தின் இலக்கு முடிவற்ற மரணம் மறுபிறப்பு ஆகிய பிறவிச் சுழற்சியில் (சம்சார) விடுபடுவதே. அப்படி விடுபடும் போது நம்முடைய தனிப்பட்ட ஆளுமை என்பது ஒரு மாயை என்றும் அனைத்தும் ஒன்றுதான் என்றும் உணர்ந்துகொள்ளப்படும். இந்த வெளிச்சத்தைப் பெறும்வரை மனிதர்கள் தங்களுடைய செயல்களின் அடிப்படையில் மாறி மாறி பிறவி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய ஒரு பிறவில் செய்யப்பட்ட கர்மம் அவர்களுடைய அடுத்த பிறவியில் எப்படிப் பிறப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும். அவர்கள் மனிதர்களாகப் பிறப்பார்களாக, குரங்குகளாகப் பிறப்பார்களாக, கொசுக்களாகப் பிறப்பார்களா, குதிரைகளாகப் பிறப்பார்களாக அல்லது குழவிகளாகப் பிறப்பார்களாக என்பது அவர்களுடைய முற்பிறவின் வினைகளினால் தீர்மானிக்கப்படும்.*
ஆகவே, இந்த உலக நோக்கின்படி வெவ்வேறு காரியங்கள் எதுவும் இல்லை. வாழ்க்கையின் பிறவிச் சக்கரத்தில் நாம் சுழன்றுகொண்டிருக்கும் வரை மெய்மையின் உண்மையான தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியாது தொடர்ந்து மறுபிறவி எடுத்துக்கொண்டே இருப்போம்*. நம்முடைய உலக வாழ்க்கை முடிந்த பிறகு இன்னொரு வடிவத்தில் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்போம். நாம் யோகாசனங்களை சரியாகக் கற்றுக்கொண்டு ஞானத்தைப் பெறும்வரை இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
- * பொறாமை உள்ளவர்களும் தீஞ்செயல் புரிகிறவர்களுமாகிய மனிதர்களில் கீழ்த்தரமானவர்கள் பொருள்சார்ந்த இருத்தல் என்னும் சமுத்திரத்திற்குள் தள்ளப்பட்டு பல்வேறு பிசாசின் உயிரின வடிவங்களாக உருவாக்கப்படுவார்கள் – பகவத் கீதை 16:19
இந்த உலக நோக்கு ஏற்கனவே தன்னைத் தானே மறுத்துரைத்துவிட்டது. இந்த “மாய” உலகத்திலிருந்து விடுபட்டு “நிர்வாணத்தை” அடையும்படி பல்வேறு காரியங்களைச் செய்யச் சொல்லும் இவர்கள், அனைத்தும் ஒன்று என்று சொல்கிறார்கள். மனிதனுடைய அடிப்படைப் பிரச்சனை பல்வேறு காரியங்கள் இருக்கின்றன என்று சிந்திப்பதுதான், அப்படி சிந்திப்பதை விட்டுவிட்டு, நம்முடைய தனிப்பட்ட ஆள்த்துவம் ஒரு மாயை என்பதை உணர வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது.
நீங்கள் இரண்டு வழிகளையும் பெற்றிருக்க முடியாது. “அனைத்தும் ஒன்று” என்று நீங்கள் சொல்வீர்களானால் நீங்கள் இப்போதிருக்கும் நிலைக்கும் நீங்கள் அடைய நாடும் “நிர்வாணம்” என்ற நிலைக்கும் எப்படி வித்தியாசம் இருக்கும்? அப்படி இப்போதைய உங்களை நிலைக்கும் நிர்வாண நிலைக்கும் வித்தியாசம் உண்டு என்று சொல்வீர்களானால் “அனைத்தும் ஒன்று” என்பது உண்மையில்லை. இப்படிப்பட்ட உலக நோக்கைப் பற்றிக்கொண்டிருக்கிறவர்களுக்கு முன்பாக இருக்கிற ஒரே வழி முரண்பாடற்ற நிலைப்பாட்டை விட்டுவிட்டு முரண்பாடுகளை அணைத்துக் கொள்வது மட்டுமே.
கிருஷ்ணன் உணர்வாளர்களின் பன்னாட்டு சமூகம் ("Hare Krishna" = a pantheist branch of Hinduism) என்ற பிரிவைப் பின்பற்றுகிற ஒருவரோடு நடைபெறும் உரையாடல் இப்படித்தான் இருக்கும் (இதில் அனைத்தும் கடவுள் என்ற இந்து மதத்தின் ஒரு பிரிவினரின் நம்பிக்கையைக் குறிக்க “ஹரே கிருஷ்ணா” என்பதைப் பயன்படுத்தியிருக்கிறேன்):
நீங்கள் கவனித்தீர்களா, முன்ஊக அணுகுமுறையின்படி எதிர்த் தரப்பில் உள்ள உலக நோக்கில் அவர்களைத் தாக்குவதற்குரிய ஆயுதத்தைத் தேடி அதையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறோம். இந்த ஹரே கிருஷ்ணா சீடர் இருதலைக் கொல்லியாக தவிப்பதைக் கவனியுங்கள். அவருடைய உலக நோக்கு புறக்கணிக்கும் காரியத்தை நோக்கி அவர் அபயமிட முடியாது, ஆனாலும் அவர் தம்முடைய உலக நோக்கைச் சரியென நிறுவ முயல்கிறார். இந்த வகையில் அவர் தன்னைத் தானே முரண்படுத்துகிறார் (2 தீமோ. 2:25). வேதாகமம் இவர்களைப் பற்றிச் சொல்லுவது இதுதான்: “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,” (ரோமர் 1:22).