Previous Chapter -- Next Chapter
2.2. முகம்மதின் திருமணமும் தீர்க்கதரிசி அழைப்பும்
இஸ்லாமிய ஆதாரங்கள் முகம்மது நபியின் பன்னிரண்டு முதல் நாற்பது வயது வரையிலான வாழ்க்கையைப் பற்றி கிட்டத்தட்ட முழுவதுமாக மௌனமாக இருக்கின்றன, இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் நம்மிடம் உள்ளன: முதலாவது, கதீஜாவுடனான அவரது திருமணம், இரண்டாவது, அவரது தீர்க்கதரிசன அழைப்பு.
இளவயதிலேயே, தனது குலத்தைச் சேர்ந்த வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்த விதவையால் முகம்மது நபி பணிக்கு அமர்த்தப்பட்டார். அவரது வர்த்தகப் பயணக் குழுவின் (caravan) பொறுப்பை ஏற்றுக்கொள்வதே அவரது வேலை. கதீஜா என்பது அந்த விதவையின் பெயர்; இதற்கு முன்னர் மூன்று திருமணங்கள் செய்துகொண்டிருந்தார், அவருடைய முந்தைய ஒவ்வொரு திருமணத்திலிருந்தும் பிள்ளைகள் இருந்தனர். இத்தனை இளம் வயதிலேயே முகம்மது நபிக்கு ஏன் இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது, அல்லது கதீஜா ஏன் முகம்மது நபியை மணந்துகொள்ள முடிவுசெய்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. அவருக்கு இருபத்தைந்து வயது இருந்தபோது, கதீஜாவுக்கு நாற்பது வயது இருந்தபோது, திருமணம் செய்துகொள்ளுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சில இஸ்லாமிய ஆதாரங்களின்படி, கதீஜா உணவு மற்றும் பானங்களைச் செய்தார், மேலும் அவர் தனது தந்தையையும் தனது இனத்தைச் சேர்ந்த சில ஆண்களையும் அழைத்தார், மேலும் அவர்கள் குடித்துவிட்டு மயங்கியிருந்தனர். பின்னர் கதீஜா தனது தந்தையிடம், "முகம்மது பின் அப்துல்லா என்னை மணந்துகொள்ள விரும்புகிறார்; அவரை எனக்கு மணம்முடித்து வையுங்கள்" என்றார். எனவே, அவர் அவளை அவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். மெக்கா பாரம்பரியப்படி, அவள் தனது தந்தைக்கு (அவருடைய) மீது பரிமளத்தைப் பூசி, அலங்கரிக்கப்பட்ட தங்க ஹுல்லாவை (சிறப்பு சந்தர்ப்பங்களில் அணியப்படும் சிறப்பு அங்கி) அணிவித்தார். அவர் போதை தெளிந்தபோது, தான் வாசனை திரவியம் பூசப்பட்டிருப்பதையும் ஹூல்லா அணிந்திருப்பதையும் பார்த்தார். "எனக்கு என்ன நடந்தது? இது என்ன?" என்று அவர் கேட்டார். "நீங்கள் முகம்மது பின் அப்துல்லாவுக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தீர்கள்" என்று கதீஜா பதிலளித்தார். "நான் உன்னை அபு தாலேபின் அனாதைக்கு திருமணம் செய்துகொடுத்தேனா?" "இல்லை. ஒருபோதும் இருக்கமுடியாது!" என்று அவளுடையத் தந்தை கூச்சலிட்டார், "குரைஷ் முன்னால் ஒரு முட்டாளாகத் தோன்றுவது மற்றும் மக்களிடம் நீங்கள் குடித்திருந்ததாகச் சொல்வது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றவில்லையா?" என்று கதீஜா கேட்டார். அவள் தொடர்ந்து வற்புறுத்த, இறுதியில் அவர் சம்மதித்தார். தனது மகளை வசதியற்ற ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் இருந்தபோதிலும், இறுதியில் அவர் சம்மதித்தார் (அஹமது இப்னு ஹன்பல், முஸ்னத்).
கதீஜாவுடன் திருமணம் செய்துகொண்டதன் மூலம், முகம்மது நபி தனது சிந்தனை மற்றும் ஆன்மீக தேடலுக்காக அதிக நேரம் செலவிட முடிந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, முகம்மது நபி தரிசனங்களைக் காணத் தொடங்கினார். தனக்கு தொந்தரவு தரும் அனுபவங்கள் வருவதைக் கண்டு கவலைப்பட்டு, தனது மனைவியிடம் தனது கவலைகளைப் பகிர்ந்துகொண்டார். கதீஜா, தனது உறவினரான வராகாவிடம் அவரை அழைத்துச் சென்றார். வராகா ஏதோ ஒரு வகையான கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தார், ஆனால் அவர் கிறிஸ்தவத்திற்கு முரணான கள்ள உபதேச நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார். பல தெய்வ வழிபாட்டை பின்பற்றாமல், ஒரே கடவுளை நம்பும் மதத்தைப் பற்றி அறிந்தவர் என்ற வகையில், வராகா முகம்மது நபியின் அனுபவங்களைப் பற்றி புரிந்துகொள்ளக்கூடும் என்று கதீஜா நம்பினார். உங்கள் அனுபவங்கள், மோசே போன்ற தீர்க்கதரிசிகளின் அனுபவங்களைப் போன்றவை என்று வராகா முகம்மது நபியிடம் கூறினார். இதன் மூலம், முகம்மது நபியின் மனதில் சாத்தியங்களின் விதைகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
வராகா இறந்த சிறிது காலத்திற்குப் பிறகு, முகம்மது நபியின் தரிசன அனுபவங்கள் நின்றுபோயின. தரிசனங்கள் இல்லாததன் விளைவாக, முகம்மது நபி தன்னம்பிக்கை இழந்து மனச்சோர்வுக்கு ஆளானார். இந்த நேரங்களில், மலையுச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட நினைக்கும்போதெல்லாம், கபிரியேல் அவரது முன் தோன்றி நீங்கள் உண்மையிலேயே அல்லாவின் தூதர் என்று கூறுவார் (புகாரி, ஸஹீஹ்). எவ்வாறாயினும் முகமது, இன்னும் நம்பவில்லை, சில வற்புறுத்தல்கள் அவருக்குத் தேவைப்பட்டது. முகம்மது நபியின் தரிசனங்கள் ஒரு அசுத்த ஆவியல்ல, அது ஒரு இறை தூதர் என்று கதீஜா நம்பவைக்க வேண்டியிருந்தது என்று கூறும் பல கதைகள் உள்ளன. இதுபோன்ற ஒரு கதை, முகம்மது நபியின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய மிகப் பழைய வரலாற்று ஆசிரியர் இப்னு இஷாக் அவர்களால் கூறப்படுகிறது:
கதீஜா தனது முக்காட்டை விலக்கியபோது அந்த விருந்தாளி மறைந்துபோனதன் மூலமும், அவருக்கு மரியாதை காட்டியதன் மூலமும், அவர் ஒரு அசுத்த ஆவியாக இருக்க முடியாது, மாறாக மரியாதை காட்டும் இறை தூதனாகவே இருக்க வேண்டும் என்று முகம்மது நபியிடம் விளக்கினார்.
இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கதீஜாவும் வராகாவும் தான் முதன் முதலில் முகம்மதை ஒரு நபி என்று நம்பி, அவரையும்கூட அதை நம்ப வைத்தவர்கள்.