Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 076 (Is the Qur’an superior to other scriptures because they all have been changed, while the Qur’an alone has been preserved?)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு
13.1. குர்ஆன் அப்படியே இருக்கிறது, ஆனால் பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை

13.1.6. மற்ற மறைநூல்கள் மாற்றப்பட்டுவிட்டன, ஆனால் குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்பட்டது என்று சொல்வதால், குர்ஆன் மற்ற மறைநூல்களை விட உயர்ந்ததா?


குர்ஆன் மற்ற மத நூல்களை விட சிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள். ஏனென்றால், பிற மத நூல்கள் காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்கின்றனர். அதனால், அந்த நூல்களின் அசல் வார்த்தைகள் என்னவென்று நமக்குத் தெரியாது என்கின்றனர். குர்ஆன் மற்ற மத நூல்கள் மாற்றியமைக்கப்பட்டன என்று சொல்வதை கையெழுத்துப் பிரதிகள், பைபிள் உரை, அல்லது குர்ஆன் கூட ஆதரிக்கவில்லை. கடவுளின் வார்த்தையை பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களின் கையில் இல்லை, மாறாக கடவுளின் கையிலேயே இருப்பதை பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது :

“புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.” (ஏசாயா 40:8)
“என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.” (எரேமியா 1:12)

தாவீது சங்கீதத்தில் இவ்வாறு கூறுகிறார்:

“கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.” (சங்கீதம் 119:89)

சுவிசேஷத்தில் கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்:

“வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 5:18)
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” (மத்தேயு 24:35)
“கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே. ” (1 பேதுரு 1:25)

கடவுள் தனது மக்களுக்குக் கொடுத்த தெளிவான எச்சரிக்கையும் நம்மிடம் உள்ளது:

“இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.” (உபா. 4:1-2)

வெளிப்படுத்தின விசேஷத்தில் இந்த எச்சரிக்கை மீண்டும் கூறப்படுகிறது:

“இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்..” (வெளி. 22:18-19)

உரையிலுள்ள அனைத்து வாக்குறுதிகள் மற்றும் எச்சரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, ஒரு நம்பிக்கையாளருக்கு ஒரு எழுத்தைக் கூட மாற்றுவது என்பது கற்பனைக்கு எட்டாதது. மாற்றங்களைச் செய்யும் மக்கள் உண்மையான விசுவாசிகள் இல்லை என்று ஒரு முஸ்லீம் கூறினால், அப்போது விசுவாசிகள் சாதாரணமாக அத்தகைய மாற்றங்கள் நடப்பதை அனுமதித்து மௌனமாக இருப்பார்களாக என்ன? பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்று குர்ஆனே கூறவில்லை. மாறாக, குர்ஆன் கூறுவது இதுதான்:

“நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தையும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்;. ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.” (குர்ஆன் 5:44-48).

குர்ஆனின் இந்தப் பகுதியில் சில விஷயங்களை கவனிக்கிறோம்:

  • குர்ஆன், தவ்ராத்தையும் இஞ்சீலையும் அல்லா அருளிய வேத நூல்களாகக் குறிப்பிடுகிறது. இவ்வேத நூல்களில் மனிதகுலத்திற்கு நேர்வழி மற்றும் ஒளி வழங்கப்பட்டுள்ளதாகவும் குர்ஆன் விளக்குகிறது.
  • அது தீர்க்கதரிசிகளுக்கும், சாஸ்திரிகளுக்கும், ரபீக்களுக்கும் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்பட்டது.
  • தனக்கு முன்பாக வந்த தோராவை உறுதிப்படுத்தினார்.
  • குர்ஆன் கூற்றுப்படி, யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை வைத்துத் தீர்ப்பளிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.
  • குர்ஆன் இஞ்சீலை உறுதிப்படுத்தி, அதைப் பாதுகாப்பதாகக் கூறுகிறது.
  • அர்பெரி "hidāyat (guidance) wa nūr (light)" என்று மொழிபெயர்க்கும் சொற்றொடர், காலத்தை (tense)க் குறிக்கும் விதத்தில் அரபு மொழியில் உண்மையில் இரண்டு அர்த்தங்களைத் தரும் (உண்மையில் இந்த சொற்றொடரில் வினைச்சொல் இல்லை). இருப்பினும், இது முன்னர் உண்மையாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது இஞ்சீல் மருவியுள்ளது என்று கருத்து தருவதற்கான முயற்சியில், சில நவீன முஸ்லீம் மொழிபெயர்ப்புகள் "நேர்வழி இருந்தது" அல்லது "ஒளி இருந்தது" என்று கூறுகின்றன. இது நேர்வழி இருந்தது ஆனால் இனி இல்லை என்று குறிப்பிடுவது போன்ற மொழிபெயர்ப்பு ஆகும், இது அரபு மொழியால் தெளிவாக ஆதரிக்கப்படவில்லை. கடந்த கால மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டாலும், உரை இன்னும் நம்பிக்கையானதாக அல்லது நிலையானதாக இல்லை. குர்ஆனின் வசனப்படி, கிறிஸ்து தனக்கு முன் இருந்ததை உறுதிப்படுத்தினார், முகமது அவருக்கு முன் இருந்ததை உறுதிப்படுத்தினார், எனவே முகமது அல்லது கிறிஸ்துவின் காலத்திலிருந்து எந்த உரை இருந்தாலும், அது உறுதிப்படுத்தப்பட்ட உரை. கிறிஸ்துவின் அல்லது முகமதுவின் காலத்தைச் சேர்ந்த உரை துல்லியமாக இல்லை என்றால், குர்ஆனின் உறுதிப்படுத்தல் கோரிக்கை தவறானது, மேலும் அது வேதங்களைப் பாதுகாப்பதில் குர்ஆன் தோல்வியடைந்தது என்றும் பொருள்படும். சவக்கடல் சுருள்களில் கிறிஸ்துவுக்கு முந்தைய பைபிள் வாசகம் தற்போது நம்மிடம் உள்ளது மற்றும் முகமதுவின் காலத்திற்கு முந்தைய பல்லாயிரக்கணக்கான பைபிள் கையெழுத்துப் பிரதிகளும் நம்மிடம் உள்ளன.

இந்த கட்டத்தில் முஸ்லீம்கள் பொதுவாக சில உரை மாறுபாடுகளை சுட்டிக்காட்டி தங்கள் கருத்தை நிரூபிக்கும் உரிமைகோர முயற்சி செய்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல. ஒரு உரையில் மாறுபாடு இருப்பதற்கும், உரையின் கருத்தை அறியாமல் இருப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. உதாரணமாக, "இயேசு கிறிஸ்து" மற்றும் "கிறிஸ்து இயேசு" என்று நாம் கூறினால், அவை மாறுபாடுகளாகக் கருதப்படும், ஆனால் உரை புரியவில்லை என்று யாரும் நினைக்க மாட்டார்கள். மேலும், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தங்கள் (மறை) நூல்களின்படி தீர்ப்பளிக்கும்படி குர்ஆன் கேட்கிறது. குர்ஆன் திருத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு நூலின்படி அவர்களைத் தீர்ப்பளிக்கும்படி கேட்பது ஏன்? குர்ஆனில் வேறொரு இடத்தில் நாம் வாசிக்கிறோம்:

“(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக). ” (குர்ஆன் 16:43)

எனவே, தங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கேட்கும்படி குர்ஆன் மக்களுக்குக் கூறுகிறது. முகமதுவுக்கும் சந்தேகம் இருந்தால் அவர்களிடம் கேட்கும்படி கூடக் கூறுகிறது:

“(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.” (குர்ஆன் 10:94).

குர்ஆன் முகமது நபிக்கு சந்தேகம் இருந்தால் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் (புத்தகத்தின் மக்களை) கேட்கும்படி கூறுகிறதே, அதே நேரத்தில் அவர்களின் (புத்தகங்களின் மக்களின்) வேதங்கள் திருத்தப்பட்டவை என்று குறை கூறுகிறதா? இதை நாம் எப்படி நம்புவது?

நான் பைபிளின் சத்தியத்தைக் குர்ஆனை வைத்து நிரூபிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, இஸ்லாம் அதன் அடிப்படை ஆவணங்களில் கூறுவதற்கும், பொதுவாக முஸ்லீம்கள் நம்புவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிய முயற்சிக்கிறேன். குர்ஆன் மற்றும் ஆரம்பகால முஸ்லீம்கள் யூதர்கள் வார்த்தைகளை திரித்து, உண்மையான மதத்தை கிண்டல் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டினர் (குர்ஆன் 4:46) என்பதும், அவர்கள் யூதர்கள் உரையை மாற்றியதாக குற்றம் சாட்டவில்லை என்பதும் சுவாரஸ்யமான விஷயம். இது இன்றைய முஸ்லீம்களின் நம்பிக்கை அல்ல. மேலும், எந்த உரையிலும் இது ஒரு பொதுவான பிரச்சனைதான். யாராவது ஒருவர் எந்த காரணத்தினாலும் உரையின் அர்த்தத்தை திரித்துவிட முயற்சிக்கலாம். இதுபோன்ற சமயங்களில் உரையின் தெளிவான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நாம் நேரடியாக உரையை ஆராய வேண்டும். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கள்ள உபதேசம் செய்பவர்களும் மதவெறியர்களும் எப்போதும் அவ்வாறு செய்கிறார்கள். ஆனால், உரையை மாற்றுவது பற்றி, எந்த ஆரம்பகால இஸ்லாமிய மூலங்களிலும் கூறப்படவில்லை. குர்ஆன் யூதர்களோ கிறிஸ்தவர்களோ அல்லாவிடமிருந்து வெளிப்படுத்தப்படாத எதையும் தங்கள் வேதங்களில் எழுதிவைத்ததாகக் கூறவில்லை. ஆனால், அவர்கள் இரகசியங்களைப் பாதுகாக்கிறார்கள் (குர்ஆன் 2:77), சாட்சியத்தை மறைக்கிறார்கள் (குர்ஆன் 2:140), தங்கள் நாக்குகளால் வேதத்தை திரிக்கிறார்கள் (குர்ஆன் 3:78), வேதத்தைப் புறக்கணிக்கிறார்கள் (குர்ஆன் 3:187), செய்தியின் சில பகுதிகளை மறந்துவிடுகிறார்கள் (குர்ஆன் 5:13) என்று குர்ஆன் கூறுகிறது. இதன் மூலம், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வேதங்களின் வாய்வழி கதைகள் அல்லது அவற்றின் விளக்கங்களில் குறைபாடு காட்டுவதாகவே குர்ஆன் குற்றம் சாட்டுகிறது, ஆனால் அவர்களின் உண்மையான வேதத்தில் குறைபாடு இல்லை என்பதை முஸ்லீம் அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணமாக, அர்-ராஸி எழுதுகிறார்:

“இங்கு மாற்று என்பது உரையை தவறாகப் பொருள் கொள்வது, போலி விளக்கத்தைப் பயன்படுத்துவது, சூழலில் இருந்து சொற்களை எடுத்துக்கொள்வது, ஒரு வார்த்தையை உண்மையான அர்த்தத்திற்கு மாறாக எடுத்துக்கொள்வது, இது இன்றைய மதவெறியர்கள் செய்வது போன்றது, இதுவே மறுதலிப்பின் சரியான அர்த்தம்.”

எனவே ஆதாரம் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. முஸ்லீம்கள் நினைப்பது போல் இது பைபிளுக்கு எதிரான குற்றச்சாட்டு மட்டுமல்ல, குர்ஆனுக்கும் எதிரான குற்றச்சாட்டாகும், ஏனெனில் குர்ஆன் கூறுகிறது:

“அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது” (குர்ஆன் 6:34),

குர்ஆன், வெளிப்படுத்தப்பட்ட வேதம் உண்மையிலேயே இறைவனின் வார்த்தைகள் என்று கூறுகிறது! மேலும், நாம் பார்த்தபடி, திருக்குர்ஆன் வேதங்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது (5:48), அதாவது:

  1. அல்லாஹ் தனது வார்த்தையை பாதுகாக்கத் தவறிவிட்டான்.
  2. யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாவின் வார்த்தைகளைக் மாற்றியமைக்க முடிந்தது, இந்த விசயத்தில் அல்லாவால் எதுவும் செய்ய முடியவில்லை.
  3. முகமது நபி அந்தக் காலகட்டத்தில் இருந்த பைபிளின் ஒரு பிரதியை வைத்திருக்கத் தவறிவிட்டார் என்பதையே ஹதீஸ் நமக்குத் தெரிவிக்கிறது: “யூதர்களின் ஒரு குழு வந்து அல்லாவின் தூதரிடம் குஃபாவிற்கு வருமாறு அழைத்தது. எனவே அவர் அவர்களின் பள்ளிக்கூடத்திற்குச் சென்று அவர்களைச் சந்தித்தார். அவர்கள் கூறினார்கள்: அபூல் காஸிம், எங்கள் ஆண்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்துள்ளார்; எனவே அவர்கள் மீது தீர்ப்பளிக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்காக ஒரு தலையணையை வைத்தார்கள், அவர் அதன் மீது அமர்ந்து தவ்ராத்தை எடுத்து வருமாறு கூறினார். பின்னர் அவர் தன் கீழிருந்த தலையணையை எடுத்து தவ்ராத்தின் மீது வைத்து, உன்னை நம்புகிறேன், உன்னை வெளிப்படுத்தியவனை நம்புகிறேன் என்று கூறினார்.” (சுனன் அபூ தாவூத் - 4449).
  4. முகமது நபிக்குப் பின்னர், அவர்கள் அக்காலத்தில் இருந்த வேதத்தின் பிரதியைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். அந்த வேதத்தை முகமது நபி மதித்து அதன்மீது சத்தியம்செய்தார் கருதினார்.

இங்கே மூன்று சாத்தியங்கள் உள்ளன: முஸ்லீம்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வேதங்கள் திருத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் குறை கூறுவதாக அமைந்துவிடுகிறது. மேலும், இது வேறு சில கேள்விகளையும் எழுப்புகிறது. எப்போது இந்த திருத்தம் நடந்தது? யார் இதைக் கையாண்டார்கள்? முதலில் இந்தக் கேள்வியைப் பார்ப்போம். இங்கு மூன்று சாத்தியங்கள் உள்ளன:

  1. எழுதப்பட்ட காலத்திலேயே - அதாவது, மோசே மற்றும் இயேசுவின் காலத்திலேயே இது திருத்தப்பட்டிருக்கலாம். இது போன்ற சாத்தியம் இஸ்லாமிய தீர்க்கதரிசனக் கொள்கையையே அழித்துவிடும். ஏனென்றால், தீர்க்கதரிசிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஒரு நம்பகமான தீர்க்கதரிசியை அல்லாஹ் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டான் என்பதும் இதற்கு அர்த்தமாகிவிடும். இது தீர்க்கதரிசிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் மற்றும் தவறற்றவர்கள் என்ற குர்ஆனின் கூற்றுக்கு முரணாக அமைந்துவிடும். மேலும், குர்ஆன் ஒரு தவறான வேதமாகக் கருதப்படும்.
  2. வேதம் இயேசுவுக்கும் முகமது நபிக்கும் இடைப்பட்ட காலத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனென்றால், அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரதிகள் நம்மிடம் உள்ளன. மேலும், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திற்குரிய செங்கடல் சுருள்களும் நம்மிடம் உள்ளன. இது முகமது நபியும் முஸ்லீம்களும் குர்ஆனில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்களைப் பாதுகாக்கும் பணியில் தவறிவிட்டார்கள் என்பதைக் குறிக்கும்.
  3. முகமது நபிக்குப் பின்னால் இந்த மாற்றம் நடந்திருக்கலாம். ஆனால், இந்தக் கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. கையெழுத்துப் பிரதிகளின் இருப்பும், பல மொழிகளில் மொழிபெயர்ப்புகள் இருப்பதும் இதற்குக் காரணம்.

திருத்தமே நடக்கவில்லை என்பதே இதற்கான ஒரே சாத்தியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. மாறாக, இதற்கு எதிரான பல ஆதாரங்கள் உள்ளன.

இஸ்லாம் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வேதங்களை திருத்தியதாகக் குற்றம் சாட்டுகிறது. இருப்பினும், யார் இந்த மாற்றத்தைச் செய்தார்கள் என்பது பற்றி இஸ்லாம் எந்த பதிலையும் சொல்லவில்லை. இந்தக் கேள்விக்கு பல சாத்தியங்கள் உள்ளன. இப்போது அவற்றைப் பார்ப்போம்.

a) யூதர்கள்: யூதர்கள் வேதங்களை மாற்றி இயேசு அல்லது முகமது பற்றிய தீர்க்கதரிசனங்களை மறுப்பதற்காக அல்லது மாற்றுவதற்காக இருந்தால், முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவர்கள் ஏன் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை? மாறாக, கிறிஸ்தவர்கள் யூதர்களைக் குற்றம் சாட்டினாலும், வேதங்களை மாற்றியது குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இல்லை. அப்போஸ்தலர் பவுல் கூறுகிறார்:

“அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;” (ரோமர் 9:4)

ஆதி சபை பழைய ஏற்பாட்டைச் சார்ந்திருந்தது. கிறிஸ்து இவ்வாறு சொன்னார்:

“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.” (யோவான் 5:39)

அவர் பழைய ஏற்பாட்டைப் பற்றி பேசினார். பேதுரு இவ்வாறு சொன்னார்:

“அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு;” (2 பேதுரு 1:19),

அவர் பழைய ஏற்பாட்டைப் பற்றி பேசினார்; லூக்கா இவ்வாறு எழுதினார்:

“அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 17:11)

பழைய ஏற்பாட்டைப் பற்றியே அவர் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில், புதிய ஏற்பாடு வேதங்களைப் பற்றி பேசும்போது, அது எப்பொழுதும் பழைய ஏற்பாட்டையே பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருநூறுக்கும் மேற்பட்டவை இன்றும் உள்ளன. யூதர்கள் அவற்றின் அர்த்தத்தை மறுக்கிறார்கள் அல்லது அவற்றை விளக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவை இன்னும் அவர்களின் வேதத்தில் இருக்கின்றன.

யூதர்கள் தங்கள் வேதத்தை மாற்றியிருந்தால், ஏன் அவர்கள் தங்கள் முன்னோர்களின் அவமானகரமான செயல்களை அதில் விட்டுவிட்டார்கள்? பழைய ஏற்பாட்டில் நீங்கள் படிப்பதைப் பற்றியும், முகமது பற்றிய பெரும்பாலான இஸ்லாமிய எழுத்துக்களில் நீங்கள் படிப்பதைப் பற்றியும் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் வித்தியாசத்தைப் புரிந்துகொள்வீர்கள். முஸ்லீம் எழுத்தாளர்கள் எதையும் மறைக்கவோ மறுக்கவோ முயற்சிக்கிறார்கள். அவமானகரமானதாக இருக்கக்கூடியவற்றை நீக்கி, அவரது பாராட்டத்தக்க செயல்களை அலங்கரிக்கும் அளவிற்கு வலியுறுத்துகிறார்கள். எனவே, யூதர்கள் ஏன் பைபிளில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்கதரிசிகளின் பாவங்கள் மற்றும் யூதேயா மற்றும் சமாரியா மன்னர்களின் துன்மார்க்கத் தன்மை பற்றிய விஷயங்களை மறைக்கும் விதமாக ஏன் எதையும் செய்யவில்லை?

b) கிறிஸ்தவர்கள்: கிறிஸ்தவர்கள் வேதத்தை மாற்றியிருக்கலாம். அப்படியிருந்தால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டைக் கொண்டிருந்தாலும், அதன் அர்த்தம் பற்றி அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பது எப்படி? அவர்கள் மாற்றியிருந்தால், முதல் நூற்றாண்டின் யூதர்கள் ஏன் இதை வெளிப்படுத்தி, கிறிஸ்தவ மதத்தை அதன் தொடக்கத்திலேயே அழிக்கவில்லை? அவர்கள் எந்த மொழியில் மாற்றத்தைச் செய்தார்கள்? எபிரேயம் மற்றும் அராமிய மொழிகளிலா அல்லது கிரேக்க மொழியிலா? கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னர் நமக்கிருந்த உரை, அதன் பின்னர் நமக்கு இருக்கும் உரையுடன் ஏன் ஒத்துப்போகிறது?

c) இருவரும்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து வேதத்தை மாற்றியிருக்கலாம். ஆனால், கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னர் அவர்கள் எப்போது இதுபற்றி ஒப்புக்கொண்டார்கள்? இது சாத்தியமற்றது, ஏனென்றால் கிறிஸ்தவத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்பே செங்கடல் சுருள்களில் கிட்டத்தட்ட முழு பழைய ஏற்பாட்டையும் நாம் கொண்டுள்ளோம். ஏன் ரோமர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் வெளிப்படுத்தி, தங்கள் இரு எதிரிகளையும் ஒரே நேரத்தில் ஒழிக்கவில்லை?

d) உலகிலுள்ள அனைத்து தேசங்களும்: இஸ்லாமியர்கள் பைபிள் உரை மாற்றப்பட்டதாக முஸ்லீம்கள் சொல்வதோடு நாம் ஒத்துப்போனால், அசல் உரையில் என்ன இருந்தது என்பதை நாம் அறிய முடியாத அளவுக்கு அது மாற்றப்பட்டிருந்தால், இதுவே அவர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு. இஸ்லாமுக்கு முன்னர் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும், அனைத்து மொழிகளிலும், எந்த இடத்திலும் இருந்த பைபிளின் பிரதி, அனைவரும் யூத வேதத்தின் மற்றும் கிறிஸ்தவ வேதத்தின் சில வசனங்களை மாற்ற ஒப்புக்கொண்டார்கள், மேலும் சில வசனங்களைச் சேர்த்தார்கள், சில நூற்றாண்டுகள் கழித்து வரவிருக்கும் ஒரு தீர்க்கதரிசியை மறுப்பதற்காக இதைச் செய்தார்கள். மேலும் பழைய கையெழுத்துப் பிரதிகளையும் மொழிபெயர்ப்புகளையும் மீண்டும் எழுதவும், அசல்களை எரிக்கவும், தாங்கள் செய்தது பற்றி எந்தக் குறிப்பையும் எழுதவோ சொல்லவோ கூடாது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு அபத்தமான தெரிவு செய்தலையே இஸ்லாமியர்கள் கடைசியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மேலே குறிப்பிட்டதுபோல, உஸ்மான் குர்ஆனுடன் செய்த செயலினால்தான் அவர்கள் இதைப் பற்றி இவ்வாறு சிந்திப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

எனவே, குர்ஆனின் வரலாறு இதுதான் என்பதால், இஸ்லாமியர்கள் மற்ற வேதங்களுக்கும் இதே நிலைமை தான் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனால், குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.

  1. குர்ஆன் ஒரே மொழியில் (அரபு மொழி) 23 ஆண்டுகளாக ஒரே இடத்தில் (மக்கா மற்றும் மதீனா) ஒருவரால் எழுதப்பட்டது. ஆனால், பைபிளோ 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பல நபர்களால் (சுமார் 40 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது) மூன்று மொழிகளில் (எபிரேயம், அராமியம், கிரேக்கம்) மூன்று கண்டங்களில் (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) எழுதப்பட்டது.
  2. குர்ஆன் ஒரே பிரிவினருக்குரிய (முஸ்லீம்கள்) ஒரு வேதம் ஆகும், அதே சமயம் பைபிள் யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களால் பரிசுத்த வேதமாகக் கருதப்படுகிறது. இவர்கள் வேதத்தின் அர்த்தம் மற்றும் உள்ளடக்கம் குறித்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்.

இறுதியாக, முஸ்லீம்களுடன் நாம் தவறற்ற வேதங்களின் தேவை குறித்து உடன்படிந்தாலும், இஸ்லாம் மற்ற மதங்களின் வேதங்கள் வழக்கொழிந்தவை அல்லது செல்லுபடியாகாதவை என்று கூறுவது உண்மையில் அர்த்தமுள்ளதாக இல்லை. ஆகையால், அசல் கையெழுத்துப் பிரதி நம்மிடம் இருந்தாலும் கூட, முஸ்லீம்கள் அது குர்ஆனால் "ரத்து செய்யப்பட்டது" அதற்குப் பதிலாகக் குர்ஆன் கொடுக்கப்பட்டது) என்று கூட சொல்லக்கூடும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 01:56 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)